பொள்ளாச்சி கொடூரம்... ஆரம்பித்த பொலிசாரின் அராஜகம்! மாணவரை தாக்கிய காட்சி

Report
344Shares

பொள்ளாச்சியில் பெண்களை அடித்து பாலியல் வன்கொடுமை செய்து, அதனை ஆபாச வீடியோவாக பதிவு செய்து ஒரு கும்பல் மிரட்டிய சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு பொதுமக்கள், மாணவர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சில கல்லூரிகள் விடுமுறையை அறிவித்துள்ளன.

இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை கண்டித்து புதுக்கோட்டை அரசு கலைக்கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக இந்திய மாணவர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் மாணவர்களை கலைந்து செல்லுமாறு வலியுறுத்தியதை எடுத்துக்கொள்ளாத மாணவர் ஒருவரை எஸ்.பி தாக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

11339 total views