போராட்டகளமாக மாறிய பொள்ளாச்சி... இளம் வழக்கறிஞரின் ஆவேசக் காட்சி!

Report
715Shares

பொள்ளாச்சியில் பல பெண்களை காதல் என்ற போலி அன்பு வலை வீசி, பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து மிரட்டி வந்த கும்பல் சிக்கியுள்ளது. இந்த வழக்கில் அடுக்கடுக்காக வெளியாகும் தகவல்கள் அனைத்தும் தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முக்கிய குற்றவாளிகள் 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் குற்றவாளிகளின் குற்ற வழக்கை விரைந்து விசாரித்து, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் , இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் கல்லூரி மாணவ , மாணவியர் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் இளம் வழக்கறிஞர் ஒருவர் தனது ஆதங்கத்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். குறித்த பெண்ணின் ஆதங்க பேச்சு அரசியல் பிரமுகர்கள், காமவெறி பிடித்த ஆண்கள் என அனைவருக்கும் செருப்பால் அடித்தது போன்று அமைந்துள்ளது.

loading...