பொள்ளாச்சி பெண் கதறலை டிக் டாக் செய்த இளம்பெண்.. கண்ணீர் சிந்தியபடி வெளியிட்ட அடுத்த வீடியோ..!

Report
1950Shares

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்கள் முதல் திருமணமான பெண்கள் வரை பலரையும் பேஸ்புக் மூலம் காதலர்களாகவும் நண்பர்களாகவும் பழகி பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் அதனை வீடியோவாக எடுத்து மிரட்டும் கும்பல் சிக்கியுள்ள சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

பொள்ளாச்சியை சேர்ந்த 4 நபர்கள் பல பெண்களை பாலியல் தொல்லை செய்து விடியோவை வெளியிட்டுள்ளனர். தங்களிடம் சிக்கிய பெண்களை இந்த கும்பல் அடித்து துன்புறுத்தி ஆபாசமாக வீடியோ பதிவு செய்யும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பாலியல் தொல்லைக்கு உள்ளான பொள்ளாச்சி பெண் கதறியதை பெண் ஒருவர் டிக் டாக் செய்திருந்தார்.

இவர் டிக்டாக் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் சிலர் பாதியாக கட் செய்து வெளியிட்டதில் பலர் குறித்த இளம்பெண்ணை சரமாறியாக விமரசனம் செய்து வந்தனர்.

இந்நிலையில், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான குறித்த இளம்பெண் தற்போது கண்ணீர் சிந்தியபடி அடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், குறித்த டிக்டாக் வீடியோவை நான் விழிப்புணர்விற்காக தான் செய்தேன். தயவு செய்து என்னை தவறாக பேசாதீர்கள் என கூறியுள்ளார்.

65094 total views