புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரனின் ஆசை… கதறி அழும் கர்ப்பிணி மனைவி!

Report
344Shares

தீவிரவாதியின் குண்டுத் தாக்குதலில் புல்வாமா பகுதியில் உயிரிழந்த தமிழக வீரர் சிவசந்திரனின் ஆசை குறித்து அவரது மனைவி பகிர்ந்துள்ளார். அவரின் வருமானத்தை வைத்து தான் எங்களது குடும்பம் வாழ்ந்து வந்தது.

தற்போது அவர் எங்களை விட்டு சென்றுவிட்டதால் என்ன செய்வதென்று தெரியவில்லை.கையில் ஒரு குழந்தை, வயிற்றில் ஒரு குழந்தை இருக்கிறது. அவர் அடிக்கடி மகனுக்கு சல்யூட் அடிப்பார். அவனை ஐ.பி.எஸ். அதிகாரியாக்க வேண்டும் என்பதே அவரது ஆசை.

அப்படி ஒரு இலட்சியத்துடன் தான் மகனை வளர்த்து வந்தார். அவர் உயிரோடு இருந்திருந்தால் கண்டிப்பாக ஆசை நிறைவேறியிருக்கும். எனவே எனது கணவரின் ஆசையை நிறைவேற மாநில மத்திய அரசுகள் உதவி செய்ய வேண்டும்.

இவர் அடிக்கடி கூறுவார் நான் உயிருடன் இருக்கும் போது என்னுடைய மரியாதை தெரியாது. நான் இறந்த பின்பு தான் தெரியும் அது இப்போது புரிகின்றது.அவரின் வார்த்தை அடிக்கடி காதில் ஒலிக்கின்றது.

இப்போது அவர் இறந்ததால் மத்திய மந்திரி, மாநில அமைச்சர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் வந்துள்ளனர். ஆனால் அதை பார்க்க அவர் உயிரோடு இல்லை என கதறி அழும் காட்சி காண்பவர் மனதை உருகச் செய்கின்றது.

13254 total views