தமிழகத்தில் கண்டறியப்பட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட அரிய வகை புதையல்..!

Report
116Shares

பழனி அருகே ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட அரிய வகை காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.பழனி அருகே உள்ள போடுவார் பட்டி கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வீட்டில் சில பழைய காசுகள் கிடைத்துள்ளன.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நந்திவர்மன் கூறுகையில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக் காசுகள் கோப்பரகேசரி வர்மன் முதலாம் இராஜராஜா சோழன் கால காசுகளாகும்.

தஞ்சையை தலைநக ராகக் கொண்டு ஆட்சி செய்த சோழ அரசர்களில் புகழ் பெற்றவர் முதலாம் ராஜராஜ சோழன் சுந்தர சோழ சக்கர வர்த்திக்கு பின்னர் கி.பி 985 ஆம் ஆண்டு அருள்மொழிவர்மர் என்ற பெயருடன் ஆட்சிப் பொறுப்பேற்ற இராஜராஜ சோழன் கி.பி.1014 முடிய 30 ஆண்டுகள் தமிழகத்தை சிறப்பாக ஆட்சி செய்தார்.

இவரது ஆட்சியில் இராணுவம் ஆட்சி அமைப்பு, இலக்கியம், நுண்கலை போன்றவை மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தது.கி.பி 993ல் இலங்கையின் மீது படையெடுத்து இலங்கை முழுவதையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்.

இலங்கை போரில் வெற்றி பெற்றதை குறிக்கும் வகையில் இந்த காசுகளை வெளியிட்டுள்ளார்.

தங்கம் மற்றும் செம்பினால் வெளியிடப்பட்ட இந்தக்காசுகள் இலங்கை சோழ சாம்ராஜ்ய த்தின் ஒரு பகுதி என்பதை குறிக்கிறது. 1 .5. செ.மீ விட்டமும் 0.5. மி.மீ தடிமனும் கொண்ட இந்த காசுகள் ஒழுங்கற்ற வட்ட வடிவம் கொண்டுள்ளது.

நாணயத்தின் ஒரு பக்கம் போர்வீரர்கள் வேலுடன் இருப்பது போலவும் மற்றொரு புறம் இராஜராஜ சோழனின் முத்திரை பொறிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த நாணயங்கள் செம்பினால் செய்யப்பட்டவை.

இராஜ இராஜ சோழனின் இந்த காசுகள் பழனிப் பகுதியில் பரவலாக கிடைக்கின்றது. இதே போல தங்கத்திலான காசுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அவை இதுவரை கிடைத்ததில்லை. தங்கத்தின் மதிப்பு அதிகம் என்பதால் இந்தக் காசுகளை மக்கள் ஆப ரணங்களுக்காகவும், அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு அழித்திருக்கலாம்.

செம்பினால் ஆன நாணயங்கள் மட்டும் அவ்வப்போது கிடைத்து வருகின்றன. பண்டைத் தமிழ் மக்கள் வணி கத்திற்காக நாணயங்களை அதிக அளவுபயன்படுத்தி வந்துள்ளது. நாகரிகத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கியுள்ளதை காட்டுகின்றது. மேலும் இந்தநாணயங்களை அருங்காட்சியகத்திற்கு வழங்க முயற்சிக்கப்படும் என்று தெரிவித்தார்

4504 total views