புல்வாமா தாக்குதலை கொண்டாடிய 4 இந்திய மாணவிகள்.. புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி..

Report
499Shares

புல்வாமா தாக்குதலை கொண்டாடும் விதமாக போட்டோ வெளியிட்ட 4 மாணவிகளை பொலிசார் கைது செய்துள்ளனர்.

காஷ்மீரில் பயங்கரவாதிகள் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது நடத்திய தாக்குதலில் 44 வீரர்கள் பலியாகியுள்ளனர். இந்த துயர சம்பவம் தேசத்தையே உலுக்கியுள்ளது. இதற்கு இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என நாடெங்கிலும் இருந்து கண்டனக்குரல்கள் எழுந்து வருகிறது.

இந்நிலையில் ராஜஸ்தானில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வரும் தல்வீன் மன்சூர், ஜோகிரா நசீர், உஸ்மா நசீர், இக்ரா ஆகிய 4 மாணவிகள் புல்வாமா தாக்குதலை கொண்டாடும் விதமாக இணையத்தில் போட்டோ பதிவிட்டனர்.

இதனையறிந்த கல்லூரி நிர்வாகம் உடனடியாக அந்த 4 மாணவிகளை இடைநீக்கம் செய்தது. மேலும் இதுகுறித்து காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். பொலிசார் அந்த 4 மாணவிகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

18795 total views