ஓநாய் நோய் போல விசித்திரமாக பிறந்த அதிசய சிறுவனின் இலட்சியம்! பிறந்த ஒரு மணி நேரத்தில் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி?

Report
449Shares

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த 13 வயதான லலித் பாட்டீடர் என்ற சிறுவன் மிகவும் அரிதாக வரக்கூடிய ஓநாய் நோய்க்குறி என்று அழைக்கப்படும் ஹைபிரைடிசோசிஸ் என்னும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளான்.

குறித்த சிறுவன் பாடசாலையில் பிரபலமாகவும், படிப்பில் கெட்டியாகவும் இருந்து வருகின்றார்.

புதிதாக பார்ப்பவர்கள் குறித்த சிறுவனை குரங்கு என நினைத்து கல்லை கொண்டு எறிவதாக கவலை வெளியிட்டுள்ளார்.

மேலும், பொலிஸ் அதிகாரியாக வேண்டும் என்பதே சிறுவனின் இலட்சியம். தவறு செய்பவர்கள் அனைவரையும் பிடித்து சிறையில் அடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

சில நேரங்களில் நான் மற்ற குழந்தைகளை போல இருக்க ஆசைப்படுகிறேன். ஆனால் அது என்னால் முடியாது என்பதால், என்னுடைய வழியில் நிம்மதியாக இருக்கிறேன் என்றும் சிறுவன் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சிறுவனின் தாய் இது குறித்து கருத்து வெளியிடும் போது,

லலித் பிறப்பதற்கு முன்பு எனக்கு 5 குழந்தைகள் பிறந்தனர் அனைவரும் பெண் குழந்தைகள் என்பதால், ஆண் குழந்தை வேண்டி ஏராளமான கோவில்களுக்கு சென்று வேண்டுதல் வைத்தேன். ஒரு வழியாக லலித் பிறந்ததும் அதிக மகிழ்ச்சியடைந்தேன்.

ஒரு மணி நேரம் கழித்து குழந்தையை பார்க்கும் போது தான் பெரும் அதிர்ச்சியடைந்தேன். உடல் முழுவதும் முடி இருப்பதை பார்த்து வைத்தியரை நாடியபோது பரிசோதனை மேற்கொண்ட அவர், இதனை குணப்படுத்த முடியாது என தெரிவித்துள்ளார்.

16347 total views