ஒழுங்கா சாப்பிடாதவர்களுக்கு அபராதம் விதித்த உரிமையாளருக்கு திடீரென அடித்த அதிர்ஷ்டம்! நெகிழ வைத்த பின்னணி

Report
613Shares

தெலங்கானாவின் வாரங்கல் பகுதியில் உள்ள ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் உணவு வீணடிப்பதனை தவிர்க்க அதிரடி திட்டத்தை அறிவித்திருக்கிறார்.

தனது ஹோட்டலில் உணவுண்ண வருபவர்கள் உணவை வீணடிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு 50 ரூபாய் அபராதம் விதித்து வசூலித்து வருகிறார்.

லிங்காலால் கேதாரி என்கிற பெயருடைய அந்த உரிமையாளர் இவ்வாறு வசூலித்த தொகையை குழந்தைகள் நல காப்பகம் ஒன்றுக்கு கொடுக்கிறார்.

தொடர்ந்து உணவை மிச்சம் வைக்கும் வாடிக்கையாளர்களுக்கு உணவின் அருமையை உணர்த்தவே தான் சற்று கடுமையாக நடந்துகொண்டதாகவும், பின்னர் அவரை பலர் புரிந்துகொண்டதாகவும் கூறியுள்ளார்.

இந்த தகவல் வைரலாக அவரின் ஹோட்டலின் பெயர் எல்லா பகுதிகளுக்கும் பரவ தொடங்கி அங்கு செல்லும் வாடிக்கையாளர்களும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்லுகின்றனர்.

19892 total views