குழந்தைவரம் தரும் அதிசய வடை! கொதிக்கும் எண்ணெயில் கையை விடும் பக்தர்களின் அதிர்ச்சி செயல்

Report
224Shares

கடவுளுக்கு படைத்த வடையை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிற வினோத வழிபாடு தமிழகத்தில் உள்ள ஒரு கோவிலில் நடைபெற்றுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள முருகன் கோவிலில் கடந்த 10 நாட்களாக தைப்பூச திருவிழா நடைபெற்றது.

இக்கோவிலுக்கு தொடர்ந்து வரும் பக்தர்கள் பல்வேறுவிதமான நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர்.

நாக்கில் அலகு குத்துவது, முதுகு மற்றும் கால்களில் அலகு குத்தி கயிறு மூலம் அந்தரத்தில் தொங்குவது போன்ற வினோத வழிபாடுகளை செய்துவந்துள்ளனர்.

இதே போன்று சில பக்தர்கள் கொதிக்கும் எண்ணெயில் வெந்துகொண்டிருக்கும் வடைகளை வெறும் கைகளால் எடுத்து நேர்த்திக்கடன்களை செலுத்தியுள்ளனர்.

இவ்வாறு எடுக்கப்பட்ட வடைகளை கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு விற்பனை செய்துள்ளது. இதனை 'சுவாமி வடை' என சொல்லி பக்தர்கள் வாங்கிச் செல்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல் இந்த வடையை சாப்பிட்டால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் எனவும் தீராத நோய்களெல்லாம் தீர்ந்துவிடும் எனவும் அப்பகுதிமக்களின் நம்பிக்கையாக இருந்துவருகிறது. மேலும் இக்கோவிலில் விற்கப்படும் ஒரு வடையின் விலை ரூ.100 என்பதும் குறிப்பிடத்தக்கது.

7834 total views