காதலியின் திருமண வற்புறுத்தல். கள்ளக்காதலன் எடுத்த அதிரடி முடிவு.. ஆடிப்போன காவலர்கள்..!

Report
198Shares

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை - ஆமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் பயந்தர் காட்டுப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக பாதி எரிந்த நிலையில் பெண்ணின் உடலானது இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.

அந்த விசாரணையின் முடிவில்., கொலையான பெண் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாலகர் மாவட்டத்தை சார்ந்த நிர்மலா (47) என்பதும், அவரது அலைபேசி எண்ணிற்கு அடிக்கடி அதே பகுதியை சார்ந்த முகமது (வயது 40) என்பவர் பேசி வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து அவரை அதிரடியாக கைது செய்த காவல் துறையினர், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் நிர்மலாவை எரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

அவர் அளித்த வாக்குமூலத்தில் அவர் கூறியிருப்பதாவது, நிர்மலாவிற்கும் எனக்கும் கடந்த வருடம் முதல் இருந்த பழக்கமானது கள்ள தொடர்பாக மாறி, நானும் அவரும் இன்பமாக வாழ்ந்து வந்தோம். இந்நிலையில், அவர் தொடர்ந்து தம்மை திருமணம் செய்து கொள்ளும் படி வற்புறுத்தி வந்தார். அவர் தொடர்ந்து வற்புறுத்தி வந்தாலும் நிர்மலாவை திருமணம் செய்து கொள்ள எனக்கு விருப்பம் எள்ளளவும் இல்லை.

தொடர்ந்து எனக்கு திருமணம் செய்துகொள்ளும் படி தொந்தரவு அளித்து வந்ததால், ஆத்திரமடைந்த நான் அவரை கொலை செய்ய திட்டமிட்டு, சம்பவத்தன்று மும்பை - ஆமதாபாத் தேசிய நெடுஞ்சாலை பகுதிக்கு அழைத்து சென்று கல்லை தலையில் போட்டு கொலை செய்து பின்னர் அவரின் உடலுக்கு தீவைத்து விட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றேன், என்று காவல் துறையினரிடம் தனது வாக்குமூலத்தை தெரிவித்துள்ளார்.

7603 total views