கைக்குழந்தையை தூக்கி குப்பையில் வீசிய கொடூரம்... யார் செய்த காரியம்?

Report
116Shares

திருச்சி காஜா மலைப்பகுதியில் பிறந்த ஒரு நாள் ஆன குழந்தை சாலையோரத்தில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை சாலையோரத்தில் கிடப்பத்தை பார்த்த அப்பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டவர்கள் குழந்தையை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குழந்தையை பற்றி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள காப்பகத்துக்குத் தகவல் அளித்தனர்.

இத்தகவலை அடுத்து குழந்தை மீட்கப்பட்டது. குழந்தை முழுவதும் பரிசோதனை செய்யப்பட்ட பின்பு மாவட்ட குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்படும். இக் குழந்தையை வீசிச்சென்றது யார்? குழந்தையின் தாய் யார் ?என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என காவல் ஆய்வாளர் தெரிவித்தார்.

4479 total views