100 அடி நீளத்தில் தோசை அமைத்து சென்னையில் கின்னஸ் சாதனை.. எவ்வளே பெரிய தோசை

Report
118Shares

இப்பொது தான் உலகிலேயே முதல் முறையாக,50 சமையல் கலைஞர்கள் இணைந்து 100 அடி நீளத்தில் மிகப் பிரமாண்டமான தோசையை சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் தயாரித்தனர்.

செஃப் வினோத் தலைமையில் சரவணபவன் சமையல் கலைஞர்கள் இணைந்து நேற்று மாலை 3 மணிக்கு இந்த சாதனையை படைத்தனர். இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதற்காக 7 டன் எடை கொண்ட தோசை கல்லில், 27 கிலோ எடை கொண்ட பிரமாண்ட தோசை 100 அடி நீளத்திற்கு தயாரிக்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கு ஆசியா புக் ஆஃப் ரெக்கார்டை சேர்ந்தவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். இதற்குமுன் அகமதாபாத்தில் உள்ள ஸங்கல்ப் ஹோட்டல் தயாரித்த 54 அடி நீள தோசையே கின்னஸ் சாதனையாக இருந்தது. இந்த சாதனையை முறியடிக்கும் வகையில் இந்த 100 அடி நீள தோசை தயாரிக்கப்பட்டது.

இது குறித்த காணொளி சமூக வலைதளவாசிகளை திணறடிக்க செய்துள்ளது.

4123 total views