காதலியுடன் நெருங்கி பழகிய மருமகன்.. கொலை செய்துவிட்டு நாடகமாடிய மாமனார்..!

Report
182Shares

ஒடிசா மாநிலம் கஞ்சம் பகுதியைச் சேர்ந்தவர் பிஜய் குமார். ஐ.டி ஊழியரான இவர் டெல்லியில் பணிபுரிந்து வருகிறார். மேலும் அவரது காதலியும் அங்கு பணிபுரிந்து வந்த நிலையில் இருவரும் ஒரே பிளாட்டில் தாலிகட்டாமல் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் ஐதராபாத்தில் இருந்த பிஜய்யின் மருமகன் முறையான ஜெய் பிரகாஷ். வேலைக்காக டெல்லி சென்று அவர்களுடன் ஒரே பிளாட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் ஜெய் பிரகாஷ் பிஜய்யின் காதலியுடன் நெருங்கிப் பழகியுள்ளார்.

இதனை அறிந்த பிஜய், கோபத்தில் மருமகனை கொலை செய்ய முடிவு செய்து தனது காதலி இல்லாத நேரத்தில் தூங்கி கொண்டிருந்த ஜெய் பிரகாஷை சீலிங் ஃபேன்னால் தலையில் அடித்து கொன்றுள்ளார்.

இரத்த வெள்ளத்தில் கிடந்த அவரது உடலை வெளியே, பால்கனியில் புதைத்துவிட்டு மறுநாள் ஹவுஸ் ஓனருக்கு போன் செய்து, பால்கனியில் செடிகள் நடுவதற்கு அனுமதி கேட்டு அங்கு செடிகளை நட்டுள்ளார்..

ஒரு வாரம் கழித்து நண்பர்களுடன் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை என போலிசாரிடம் புகார் கொடுத்துள்ளார். பின்னர் இரண்டு மாதங்களுக்குப் பின் பிளாட்டில் இருந்து காலி செய்துள்ளார்.

இதற்கிடையே பிஜய் தங்கியிருந்த பிளாட்டின் உரிமையாளர் வீட்டை புதுப்பிக்க குழி தோண்டும் போது, சட்டை போர்வையுடன் எலும்பு கூடு சுற்றப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவலளிக்கப்பட்ட நிலையில் பிஜய்யின் போன் எண்ணில் தொடர்பு கொண்ட போது அவரது எண் செயல்படவில்லை, இதனால் சந்தேகமடைந்த போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்துள்ளனர்.

பல்வேறு கட்ட விசாரணைக்குப் பிறகு அவரை ஐதராபாத்தில் கண்டுபிடித்து விசாரணை மேற்கொண்டபோது கொலை செய்த உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார், பின்னர் போலீசார் அவரை கைது செய்தனர்.

5606 total views