சிறுமி கேட்ட ஒருவார்த்தை சுட்டு தள்ளி கொடூரன்!

Report
196Shares

உத்தரப்பிரதசேத்தில் விளையாட்டுத் துப்பாக்கி என்று நினைத்து கேட்ட சிறுமியை, வாலிபர் ஒருவர் உண்மையான துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் சாம்பால் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அஜய் பால் மெளரியா. இவருக்கு 10 வயதில் ஒரு மகளும், மகனும் உள்ளனர். சம்பவத்தன்று மெளரியாவும் அவரது மனைவியும் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது மெளரியாவின் மகளும், மகனும் சற்று தொலைவில் நின்று விளையாடிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், அவ்வழியாக வாலிபர் வித்யா ராம் என்பவர் துப்பாக்கியோடு சுற்றித் திரிந்துள்ளார். அவரை பார்த்த சிறுமி, அந்த துப்பாக்கி உண்மையானதா, பொம்மையா என்று கேட்டுள்ளார். இதையடுத்து உண்மையா பொய்யா என்பதை சுட்டு காட்டுகிறேன் என்ற வாலிபர், சிறுமியை துப்பாக்கியால் சுட்டார்.

சத்தம் கேட்டு ஓடி வந்த சிறுமியின் தந்தை மெளரியா, பலத்த காயங்களுடன் சிறுமி கிடைப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமிக்கு கை மற்றும் வயிற்றுப் பகுதியில் தோட்டா பாய்ந்து படுகாயத்துடன் உள்ளார்.

6231 total views