திருமணம் செய்து கொள்வதாக 14 வயது சிறுமியை சீரழித்த இளைஞர்..!

Report
231Shares

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே 9 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவியை அரவிந்த் என்ற 20 வயதான வாலிபர் அடிக்கடி வழிமறித்து தொல்லை கொடுத்துள்ளார்.

பள்ளி விடுமுறையில் சிறுமியை அரவிந்த் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று திருமணம் செய்துக் கொள்வதாகக் கூறி பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதனால், அவர் கர்ப்பமுற்றுள்ளார். இதனையறிந்த அவரது குடும்பத்தினர் சிறுமியை அரவிந்த் வீட்டில் விட்டுச் சென்றனர். அரவிந்த் குடும்பத்தினர் சிறுமிக்கு கருகலைக்கு வலியுறுத்தி வந்துள்ளனர்.

ஆனால், சிறுமி மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு குழந்தை இறந்த நிலையில் பிறந்ததுள்ளது.

இதுகுறித்து சிறுமி கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அரவிந்த் உள்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டது.

கடலூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், அரவிந்த்துக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

மற்ற 4 பேர் விடுவிக்கப்பட்டனர். இதில், அபராதத்தொகையில் ரூ.75 ஆயிரத்தை சிறுமிக்கு வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக மகிளா நீதிமன்ற அரசு சிறப்பு வழக்குரைஞர் கூறினார்.

9296 total views