ஒரே ஒரு பெண் செய்த தவறு... ஒட்டுமொத்த ஏரி நீரையும் வெளியேற்றும் அவலம்!

Report
407Shares

கர்நாடகாவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண் மூழ்கி தற்கொலை செய்து கொண்ட ஏரியிலுள்ள நீரை கிராமத்தினரின் வலியுறுத்தலுக்கு ஏற்ப அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.

நாவல்குண்டம் தாலுக்காவில் HIV நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கடந்த மாதம் 29-ம் தேதி மொரப் என்ற ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். ஏரி நீர் மாசடைந்துவிட்டதாக ஊருக்குள் தகவல் பரவ, குடிநீருக்கும், கால்நடை மேய்ச்சலுக்கும் பிரதானமாக உள்ள ஏரி நீரைப் பயன்படுத்த ஊர் மக்கள் மறுத்து விட்டனர்.

HIV பாதிக்கப்பட்ட நபர் உயிரிழந்ததும், நோய்கிருமியும் இறந்துவிடும், அப்படியே உடலில் இருந்து வெளியேறினாலும் நீரிலோ காற்றிலோ 2 நொடிகள் கூட உயிரோடு இருக்காது எனவும் அதிகாரிகள் சமாதானப் படுத்த முயன்றனர்.

ஆனால் இதை ஏற்க மறுத்த கிராமத்தினர், 3 கிலோமீட்டர் தூரம் சென்று நீரை எடுத்து பயன்படுத்துகின்றனர். அதிகாரிகள் ஏரி நீரைப் பருகத்தயாரா? எனக் கேட்கும் கிராம மக்கள், தூய நீர் நிரப்பினால் மட்டுமே பயன்படுத்துவோம் என திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டனர். இதையடுத்து, 36 ஏக்கர் பரப்புள்ள ஏரியிலிருந்து லட்சக்கணக்கான லிட்டர் நீர் மோட்டார் கொண்டு வெளியேற்றப்படுகிறது.

17236 total views