3 வயது சிறுவனுடன் சுற்றி கொடூரமாக கொலை செய்யும் தம்பதியினர்..! ஏன் தெரியுமா?

Report
779Shares

சென்னை ஆவடியில் சமீபத்தில் நிகழ்ந்த கோடுரக் கொலை தமிழகத்தையே அச்சத்தில் ஆழ்த்தியது.

சென்னை ஆவடியில் ஓய்வுபெற்ற அரசு பத்திரிக்கையாளர் ஜெகதீசன் மற்றும் அவரது மனைவி விஷாலினி தனியாக ஃபோர்ம் ஹவுஸ் என்று சொல்லப்படுகிற வீட்டு மனையில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், அவர்களிடம் வீட்டு வேலைக்காக ஆந்திராவைச் சேர்ந்த சுரேஷ் குமாரும் அவரது மனைவி பூலட்சுமியும் சேர்ந்துள்ளனர்.

மிகவும் விசுவாசமாக வேலைப்பார்த்த சுரேஷ்குமாருக்கு ஜெகதீசன் அவரது வீட்டு அருகிலேயே குடியிருப்பதற்கு வீடு ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார்.

அதன் பின்பு அவர்கள் தனியாக இருப்பதை அறிந்த இருவரும்,யாரும் இல்லாத நேரத்தில்,அவர்கள் வைத்திருந்த இரும்பு ராடால் ஜகதீசன் மற்றும் அவரது மனைவியை அடித்துக்கொன்றுவிட்டு, வீட்டிலிருந்து 50 சவரன் நகை மற்றும் பணத்தை எடுத்துச் சென்றுவிட்டனர்.

சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் கொலை நடந்த இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார்கள். அங்கு இருந்த இரும்பு ராடை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் ஆவடி பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சுரேஷ் குமார், பூலட்சுமியை கண்டுள்ளனர். மேலும் ஜகதீசன் வீட்டிலிருந்து கிடைத்த தடயங்களை வைத்தும் அவர்கள் தான் கொலை செய்தனர் என்பதை உறுதி செய்துள்ளனர்.

இந்நிலையில், சுரேஷ்குமார் மற்றும் பூலட்சுமி குறித்து விசாரணை மேற்கொண்டதில் இருவர் மீது ஆந்திராவில் 30க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

குறித்த தம்பதியினர் தற்பொது ஆவடி அருகில் தான் சுற்றி திரிவதாக கூறப்படுகிறது. 3 வயது சிறுவனுடன் சுற்றித் திரியும் இவர்கள், வீடு வாடகைக்கோ அல்லது வீட்டில் வேலை கேட்டு வந்தாலோ உடனடியாக காவல்துறையினர் 100 அல்லது 9444 803 562 என்ற எண்ணில் தகவல் கொடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளனர்.

36012 total views