உள்ளாடைகளை எவ்வளவு நாளுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும் தெரியுமா? இந்த முறையில் பயன்படுத்தி பாருங்கள்

Report
1689Shares

நாம் கடைகளில் வாங்கும் பாக்கெட் செய்யப்பட்ட சில உணவுப் பொருள்கள் மற்றும் அழகு சாதனப் பொருள்களில் அதற்குரிய காலாவதி தேதியும் குறிப்பிடப்பட்டிருக்கும். அதனால் அப்படி குறிப்பிட்ட மாதம் நாம் பயன்படுத்தும் சில பொருள்களை எவ்வளவு நாள் வே்ணடுமானாலும் பயன்படுத்தலாம்.

அதற்கு காலாவதியே கிடையாது என்று நினைத்தால் அது முற்றிலும் தவறு. அப்படி நாம் பயன்படுத்தும் சில முக்கியமான பொருள்களின் காலாவதி காலகட்டங்களை எப்படி அறிந்து கொள்வது? அதைப் பற்றி இங்கே விளக்கமாகவும் விரிவாகவும் பார்க்கலாம்.

உணவும் மருந்தும் நாம் சாப்பிடுகின்ற உணவுப் பொருள்கள் மற்றும் மருந்துப் பொருள்களுக்கு மட்டுமே காலாவதி தேதிகள் இருக்கும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதேபோல, சிலர் காலாவதி தேதி குறிப்பிட்டிருக்கும் அன்றைய தேதி வரையிலும் அந்த பொருள்களைப் பயன்படுத்துவார்கள். அது முற்றிலும் தவறு. சில தினங்களுக்கு முன்பாகவே அதை விட்டுவிடுவது நல்லது.

எதை மாற்ற வேண்டும்?

சிலர் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு மேலாகக் கூட ஒரே உள்ளாடையைத் திரும்பத் திரும்ப மாற்றி மாற்றி பயன்படுத்துவார்கள். அதெல்லாம் தவறு என்று தெரிந்தும் கூட அஜாக்கிரதையாக இருப்பது தான் நல்லதல்ல. அந்தரங்கப் பகுதிகளில் ஏற்படுகின்ற அரிப்பு, பாக்டீரியா தொற்று ஆகியவற்றுக்கு தேவையில்லாமல் மருந்து வாங்கிப் பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். ஆனால் அதற்கு மிக முக்கிய காரணமே அவர்களுடைய உள்ளாடை என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை.

உள்ளாடை மட்டுமல்ல, டூத் பிரஷ், டவல், சீப்பு, தலையணை, மெத்தை விரிப்பு என எல்லாவற்றுக்கும் சில காலாவி காலகட்டங்கள் இருக்கின்றன. அதை தெரிந்து கொண்டு மாற்றுங்கள். அதைப் பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.

டூத் பிரஷ்

குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது உங்களுடைய பல் துலக்கும் டூத் பிரஷ்ஷை மாற்ற வேண்டும். ஏனென்றால் இதனால் கூட, நோய்த்தொற்று, உடல்நலக் கோளாறுகள் ஆகியவை ஏற்பட வாய்ப்புண்டு. குறிப்பாக, வீட்டில் குழந்தைகள் பயன்படுத்துகிற டூத் பிரஷ்ஷை கட்டாயம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாற்றியே தீர வேண்டும்.

தலையணை

இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறையாவது புதிதாகத் தலையணைகளை மாற்றிவிட வேண்டும். வீட்டில் அதிகமாக தூசி சேருகின்ற இடமே இந்த தலையணை தான். மற்றொரு முக்கியமான விஷயம், இதனுடைய ஷேப் மாறி கழுத்து வலி வர ஆரம்பித்துவிடும். அதிலிருக்கும் தூசியிலிருந்து தும்மல், சருமத்தில் அரிப்பு, இருமல் ஆகிய பிரச்சினைகள் ஏற்பட்டுவிடும். இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மாற்றினாலும் கூட, மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது நன்கு துவைத்துப் பயன்படுத்துவது நல்லது.

உள்ளாடைகள்

வருடத்திற்கு ஒருமுறையாவது கட்டாயமாக உங்களுடைய உள்ளாடைகளை நிச்சயம் மாற்றியே ஆகவேண்டும். இல்லையென்றால் அதன்வழியே பாக்டீரியா தொற்றுக்கள், அந்தரங்கப் பகுதியில் அரிப்பு, எரிச்சல், புண் போன்ற பிரச்சினைகள் வந்து விடும். முக்கியமாக உள்ளாடைகளை சரியாகத் துவைத்துப் பயன்படுத்த வேண்டும். சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவு ஒன்றில், ஐந்தில் ஒரு ஆண் கட்டாயம் தினமும் சுத்தமான உள்ளாடைகளை அணிவதில்லை என்று தெரிய வந்துள்ளது.

டவல்

வருடத்திற்கு ஒருமுறை நிச்சயம் உங்களுடைய டவலை மாற்ற வேண்டும். நாம் குறிப்பதற்குப் பயன்படுத்தும் டவலில் மிக வேகமாக ஃபைபர் போய்விடும். அதனால் பாக்டீரியா தொற்றுக்கள் அதிகரிக்கும். என்னதான் நீங்கள் துவைத்தே பயன்படுத்தினாலும் தொற்றுக்கள் அதிகரிக்கத் தான் செய்யும்.

ஃபீடிங் நிப்பிள்கள்

குழந்தைகளுக்கு பால் தருவதற்கானவும் அழாமல் இருப்பதற்காகவும் கொடுக்கப்படும் ஃபீடிங் நிப்பிள்கள் நிச்சயம் நான்கு முதல் எட்டு வாரங்களுக்குள் இதை மாற்றியே ஆகவேண்டும். அதில் உண்டாகக் கூடிய கீறல், ஓட்டை போன்றவை குழந்தைகளுக்கு தொற்றுக்களை உண்டாக்கும். அதனால் நிச்சயம் ஓரிரு வாரங்களுக்குள் மாற்றுவது நல்லது.

சீப்பு

வாரத்திற்கு ஒருமுறை கட்டாயமாக சீப்பை நன்கு கழுவித் தான் பயன்படுத்த வேண்டும். வருடத்திற்கு ஒருமுறை நிச்சயம் சீப்பை மாற்ற வேண்டும். நம்முடைய வீடுகளில் கழிவறைக்கு அடுத்தபடியாக, அதிகமாக அழுக்குகள் சேரும் இடம் எதுஎன்றால் அது நம்முடைய வீட்டில் இருக்கும் கழிவறை தான். முக்கியமாக வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் தனித்தனி சீப்புகளைப் பயன்படுத்துவது நல்லது.

காலணிகள்

ஆறு மாதம் முதல் ஒரு வருடத்திற்கு ஒருமுறை செருப்புகளை மாற்ற வேண்டும். அடிக்கடி அணியும் காலணிகளை சுத்தமாகக் கழுவி அணிய வேண்டும். ஏனென்றால் உடலில் இருந்து வேர்வை வெளியேறிவிடும். ஆனால் கால் பகுதியில் இருக்கும் வியர்வை நம்முடைய பாதங்களில் காலணிகள் உள்ள இடங்களில் தேங்கிவிடும். அதனால் தேவையில்லாம சருமத் தொற்று மற்றும் வேறு சில பிரச்சினைகளும் உண்டாகக் காரணமாகிவிடும்.

ஸ்பாஞ்ச்

பாத்ரூம், கிச்சன், வீட்டை சுத்தம் செய்ய, தரை துடைக்க என நாம் பல்வேறு வகையான ஸ்பாஞ்ச்சுகளைப் பயன்படுத்துவோம். அந்த ஸ்பாஞ்சை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையேனும் கட்டாயம் மாற்றிவிட வேண்டும். ஏனெனில் பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றுக்கள் உண்டாகும்.

மெத்தை விரிப்பு

நம்முடைய வீடுகளில் ஒரே மெத்தை விரிப்பை பல வருடங்களாகப் பயன்படுத்திக் கொண்டிருப்போம். ஆனால் நிச்சயமாக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது அதை மாற்றிவிட வேண்டும். குறைந்தது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையாவது துவைத்துப் பயன்படுத்த வேண்டும்.

61707 total views