106 வயதான ரசிகையின் நீண்ட நாள் கனவை நனவாக்கிய நடிகர்? பலரை வியக்க வைத்த நெகிழ்சி காட்சி

Report
448Shares

நடிகர் மகேஷ்பாபுவின் 106 வயதான தீவிர ரசிகை ஒருவரை நேரில் பார்த்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

ஏதோ சில காரணங்களால் ஈர்க்கப்பட்ட பிரபலங்களை ஒருநாளேனும் சந்திக்க வேண்டும் என்ற ஆசை பெரும்பாலனோர்களின் மனங்களில் வேர்விட்டிருக்கும்.

ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரியைச் சேர்ந்தவர் ரேலங்கி சத்யவதி என்ற 106 வயதான பாட்டியும் அப்படித்தான்.

நடிகர் மகேஷ்பாபுவை சந்திக்க வேண்டும் என்பது அவரின் நீண்டநாள் கனா.

அவரின் கனவை எப்படியோ தெரிந்துகொண்ட நடிகர் மகேஷ்பாபு, தற்போது நடித்து வரும் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அந்தப் பாட்டியை அழைத்து வரக் கூறி அவரை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் பரவிவருகின்றன.

15331 total views