பேக்கரி கடையின் மேற்கூரையை பிரித்து கொள்ளையடித்த நபர்!

Report
103Shares

புதுச்சேரியில் பேக்கரி கடையின் மேற்கூரையை பிரித்து கொள்ளையடித்த நபரை சிசிடிவி காட்சி அடிப்படையில் பொலிசார் கைது செய்தனர்.

புதுச்சேரியில்ல் வில்லியனூரில் உள்ள பாலமுருகன் ஸ்வீட் ஸ்டால் என்ற பேக்கரி கடையில், கடந்த 27ம் தேதி நள்ளிரவு திருடன் ஒருவன் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி 10 ஆயிரம் ரூபாயை கொள்ளை அடித்தான்.

இது தொடர்பான சிசிடிவி காட்சியை கைப்பற்றி விசாரணை நடத்திய போலீசார், நேற்று முன்தினம் இரவு வில்லியனூரில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த சேகர் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, பேக்கரி கடையின் மேற்கூரையை பிரித்து அவன் கொள்ளையடித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, சேகரை கைது செய்த பொலிசார், அவனிடம் இருந்து ஆயிரத்து 500 ரூபாய் பணம், 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

3748 total views