மாணவியை கற்பழித்து கொடூர கொலை செய்த மூன்று பேர்! 35 கத்தி குத்துடன் பிணமாக மீட்கப்பட்ட அவலம்..

Report
464Shares

குஜராத் மாநிலத்தில் 16 வயது மாணவி மூன்று பேரால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத மாநிலத்தல் உனா பகுதி அருகே பெண் ஒருவரின் சடலம் கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

குஜராத் மாநிலம் கோடினார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவம் நடந்ததற்கு முன்தினம் காலை 8.30 மணிக்கு கையில் ஒரு புத்தகத்துடன் போனில் பேசிக்கொண்டே மாணவி வீட்டில் இருந்து கிளம்பியுள்ளார்.

ஆனால் ஒரு மணிநேரம் ஆகியும் மாணவி வீடு திரும்பவில்லை. அவருடைய செல்போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் அந்தப் பகுதிகளில் உள்ள இடங்களில் தேடி பார்த்துள்ளனர். பின்னர் பொலிசில் புகாரும் அளித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை மாணவியின் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. 3-க்கும் மேற்பட்ட நபர்களால் மாணவி கொடூரமாக தாக்கப்பட்டு கற்பழிக்கப்பட்டிருக்கிறார். அதன் பின்னர் அவருடைய உடலில் 35-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் தற்போது குற்றவாளிகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

18299 total views