அரசியலில் இழுப்பதற்காக நடிகர் விஜய்யை தூண்டி விட்ட சன் குழுமம்: கைது செய்யப்பட்டார் ஏ ஆர் முருகதாஸ்?

Report
1130Shares

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள படம் சர்க்கார். இந்த படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் தீபாவளி தினத்தன்று வெளியாகியுள்ளது.

படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் பட்சத்தில் திடீரென்று அதிமுக கட்சியின் சார்பாக மிகப்பெரிய பிரச்சனை எழுந்துள்ளது.

விஜய் படம் என்றாலே ஒன்று ரிலீஸ் ஆவதற்கு முன்பு பிரச்சனை எழுகிறது அல்லது ரிலீஸ் ஆனதற்கு பின்பு பிரச்சனை எழுகிறது.

ஆம், கடந்த வருடம் வெளியான மெர்சல் படத்திற்கு மத்திய அரசு வழியில் பிரச்சனை எழுந்தது போலவே, தற்போது வெளியாகியுள்ள சர்கார் படத்திற்கு தமிழக ஆளும் கட்சி வழியில் பிரச்சனை எழுந்துள்ளது.

அதாவது, முழுக்க முழுக்க தமிழக அரசியலைப் பற்றி படத்தில் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதால் கொந்தளித்த ஆளும் கட்சி படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று கூறி சர்கார் படத்தின் போஸ்டர்கள், பேனர்களை கிழித்து அட்டகாசம் செய்து வருகின்றனர்.

இதுமட்டுமல்லாது, சர்கார் படத்தில் வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள வரலட்சுமி சரத்குமாரின் பெயர் கோமலவள்ளி என்பதே பிரச்சனைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. காரணம் கோமலவள்ளி என்ற பெயர் மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் செல்லப்பெயர் என்பது தான்.

இதுமட்டுமல்லாது, படத்தில் ஆளும் கட்சி கொடுத்துள்ள இலவச மிக்ஸி, கிரைண்டர் போன்ற பொருட்களை எரிப்பது போன்ற காட்சிகள் இருப்பதால் அதிமுக கட்சி மிகவும் கொந்தளித்துள்ளது.

இதனால், பல இடங்களில் அதிமுக அரசியல் பிரமுகர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். சில தியேட்டர்களில் படத்தை திரையிட விடாமல் பிரச்சனை கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க கமல்ஹாசன், ரஜினி போன்ற மிகப்பெரிய நட்சத்திரங்கள் விஜய் படத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

இவ்வாறு பிரச்சனை சென்று கொண்டிருக்கும் நிலையில், படத்தின் இயக்குநரான ஏ.ஆர்.முருகதாஸிற்கு பாதுகாப்பு கொடுக்கும் விதமாக இன்று இரவு பொலிஸ் அவரது வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளனர்.

ஆனால், பொலிசார் அவரை கைது செய்ய தான் சென்றுள்ளனர் என்று சர்கார் படத்தை தாயரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ட்விட் செய்யப்பட்டுள்ளது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் , சன் பிக்சர்ஸ் விஜய்யை அரசியலுக்கு இழுக்கும் விதமாகவே இந்த ட்விட்டை செய்துள்ளது என விமர்சித்து வருகின்றனர்.

இருப்பினும், பிரச்சனை குறித்து ஏ. ஆர். முருகதாஸ் தன் ட்விட்டர் பக்கத்தில் இரவு பொலிசார் என் வீட்டு கதவை தட்டியது உண்மையே. ஆனால் என்னை கைது செய்யும் நோக்கத்தில் அல்ல, எனக்கு பாதுகாப்பு கொடுக்கும் விதமாகவே கதவை தட்டியுள்ளனர் என்று பதிவிட்டுள்ளார்.

பிரச்சனை எதுவாயினும், இரவு பொலிசார் ஏ.ஆர். முருகதாஸ் வீட்டிற்கு சென்றதற்கு விஜய் ரசிகர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பது காலையில் தான் தெரியும்.

34074 total views