ரூபாய் நோட்டை மடித்து பிரபல நடிகர் வெளியிட்ட காணொளி... எதற்காக தெரியுமா?

Report
186Shares

பண மதிப்பு நீக்கத்திற்கு பிறகு, பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர், வெளியிட்ட ஒரு செல்ஃபி வீடியோ, இப்போது வைரலாக சுற்றி வருகிறது.

புழக்கத்திலிருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை, பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016, நவம்பர் 8ம் தேதி, செல்லாது என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

அன்றைய தினம் இரவும் சரி, அதற்கடுத்த சில நாட்களிலும் சரி, 'சோ கால்டு' புத்திஜீவிகள் அந்த நடவடிக்கையை பாராட்டி கருத்து தெரிவித்தனர்

ரஜினிகாந்த் மட்டுமல்லாது, கமல்ஹாசனும் கூட பாஜக அரசின் இந்த நடவடிக்கையை புகழ்ந்தார். ஆனால், அடுத்தடுத்த சில நாட்களில்தான் எல்லோருக்குமே தெரிந்தது, மக்கள் அவதிப்படுவதை தவிர, வேறு பலன் கிடைக்கப்போவதில்லை என்பது. இப்போது ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களும், பணமதிப்பிழப்பால் பொருளாதாரத்திற்கு பலன் கிடைக்கவில்லை என்பதையே சுட்டி காட்டுகிறது.

ஆனால், பண மதிப்பிழப்பால் அப்படி எதுவும் நடக்கவில்லை. கலர் கலராக புதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்து மக்களை குழப்பியதுதான் மிச்சம். இப்படித்தான், பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகரும் வீடியோ ஒன்றை வெளியிட்டு, 500 ரூபாய் நோட்டை மடித்து கடலை சாப்பிட்டு கடுப்பேற்றினார்.

கடலை சாப்பிட்டபடியே, இந்த 500 ரூபாய் நோட்டு இனி வெறும் காகிதம்தான், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 30 ரூபாய் அளவுக்கு சரியப்போகிறது, ஜிபிஎஸ் வைத்து கள்ள நோட்டுகளை அபேஸ் செய்துவிடலாம் என்றெல்லாம், கதையளந்தார். 2 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், இப்போது அந்த வீடியோ நெட்டிசன்களால் செமையாக கலாய்க்கப்படுகிறது. வைரலாக சுற்றி வரும் அந்த வீடியோவை பார்த்தால் அழுவதா, சிரிப்பதா என்று உங்களுக்கே தோன்றும், பாருங்கள்.

7421 total views