3 வயது சிறுமியின் வாயில் பட்டாசு வெடித்த இளைஞன்.. பின் குழந்தைக்கு ஏற்பட்ட அவலம்

Report
122Shares

உத்திரப்பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் வாயில் பட்டாசு வெடித்தால் அந்த சிறுமிக்கு வாயில் 50ற்கும் மேற்பட்ட தையல் போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம், மீரட் நகரில் 3 வயது குழந்தை தீபாவளி பண்டிகை அன்று சாலையில் பட்டாசு வெடிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது, அந்த பகுதியை சேர்ந்த ஹர்பால் என்ற இளைஞர் சிறுமியை அழைத்து அவரின் வாயில் பட்டாசு வைத்து வெடித்துள்ளார். இதனால் சிறுமியின் வாய் கிழிந்தது.

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரின் வாயில் 50க்கும் மேற்பட்ட தையல்கள் போட்டுள்ளனர். சிறுமியின் நிலை இன்னும் கவலைக்கிடமாகவே உள்ளதாம்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியின் வாயில் பட்டாசு வெடித்த அந்த இளைஞரை தேடி வருகின்றனர்.

4319 total views