போதும் என்னால் முடியாது.. கட்டாயப்படுத்திய வாடிக்கையாளர்கள்.... மனமுடைந்த பெண் தற்கொலை!.

Report
1221Shares

திருப்பூரில் தீபாவளிக்கு கரெக்ட் டைமுக்கு துணிகளை தைத்து கொடுக்க முடியாத பெண் டெய்லர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரை சேர்ந்த பத்மினி துணி தைக்கும் தொழில் செய்து வந்தார். இவர் தைத்து கொடுக்கும் துணி ஃபேன்ஸியாக இருக்கும் என்பதால் இவருக்கு ஏகப்பட்ட கஸ்டமர்கள்.

அதே நேரத்தில் சொன்ன டைமில் துணிகளை டெலிவரி செய்வதில் இவரை அடிப்பதற்கு ஆளில்லை. அவ்வளவு நல்ல பெயர் சம்பாதித்திருந்தார் பத்மினி.

இந்நிலையில் தீபாவளிக்கு இவரிடம் பலர் துணிகளை தைக்க கொடுத்தனர். ஒரு கட்டத்தில் தன்னால் துணிகளை தைக்க முடியாது ஏற்கனவே நிறைய துணிகள் தைக்க வேண்டியுள்ளது என பத்மினி கூறியுள்ளார்.

ஆனாலும் கேட்காத கஸ்டமர்கள் உங்களால் முடியும் என கூறி துணியை கொடுத்துவிட்டு சென்றனர்.

கடந்த ஒரு வாரமாக இரவு பகல் பாராமல் துணியை தைத்த போதும் பத்மினியால் பலருக்கு சொன்ன மாதிரி துணியை கொடுக்க முடியாமல் போனது. இவ்வளவு வருடம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பெயர் இந்த முறை போய்விட்டதே என வருத்தத்தில் இருந்தார் பத்மினி.

விரக்தியில் உச்சத்திற்கு சென்ற பத்மினி நேற்று சானி பவுடர் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

37921 total views