உண்மை கண்டறியும் சோதனை உங்களுக்கும் பண்ண வேண்டும்... பாண்டேயின் கேள்விக்கு தளறாமல் பதில் கொடுத்த சின்மயி

Report
753Shares

கவிஞர் வைரமுத்து இசை நிகழ்ச்சிக்காக சுவிட்சர்லாந்து சென்ற போது தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இதற்கு சில நாட்கள் கழித்து வைரமுத்து மறுப்பு தெரிவித்து வீடியோ அனுப்பியுள்ளார்.

தான் அந்த தவறை செய்யவில்லை என்றும் அதனை நிரூபிக்க உறுதியான ஆதரத்தை இவ்வளவு நாள் திரட்டியுள்ளேன். இனி நேருக்கு நேர் சந்திக்கத் தயார் என்று கூறியிருந்தார்.

அதற்கு சின்மயி வைரமுத்துவிற்கு உண்மை கண்டறியும் சோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று பதில் கூறியதோடு காணொளி ஒன்றையும் வெளியிட்டார்.

தொடர்ந்து இவ்வாறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது சின்மயி வைரமுத்து மீது வழக்கு தொடரப்போவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

பிரபல ரிவியில் ரங்கராஜ் பாண்டே, சின்மயிடம் தாறுமாறாக கேள்விகளை கேட்டுள்ளார். அதில் இவ்வளவு தாமதமாக இந்த குற்றச்சாட்டுகளை வைப்பது ஏன் என்று கேட்கையில், தனக்கு திருமணம் முடிந்து ஒரு புக் ரிலிஸிற்காக போன் செய்து வைரமுத்து அழைத்த போது நான் வரமாட்டேன் என்று கூறினேன். அப்பொழுது என்னை மிரட்டினார்... அவரின் மிரட்டலால் நான் அழுதுகொண்டு எனது கணவருக்கும், அவரது குடும்பத்திற்கு தெரிவித்த போது அவர்கள் எனக்கு ஆதரவாக பேசிய போதே இந்த தைரியம் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.

பின்பு வைரமுத்துவிற்கு உண்மை கண்டறியும் சோதனை செய்ய கோரிய நீங்கள், புகார் கூறும் பெண்களுக்கு அந்த சோதனையைப் பண்ணலாமே என்று பாண்டே கேள்வி எழுப்பியதற்கு, சின்மயி ஆவேசமாக பண்ணுங்க என்று கூறியுள்ளார்.

15 வருடம் கழித்து வெறும் ட்விட் மட்டுமே செய்வேன், எதற்கும் போக மாட்டேன் என்றிருந்தால் எப்படி என்று கேள்வி கேட்டார்?... அதற்கு சின்மயி நீதிமன்றம் விடுமுறை என்று கூறி பாண்டேயின் வாயை அடைத்தார். அதன் பின்பு வைரமுத்து மீது வழக்கு தொடர சின்மயி தயாராக இருக்கிறார் என்று கூறினார்... அதற்கு சின்மயி ஆமாம் என்று பதிலளித்துள்ளார்.

கடைசியாக பாண்டே உங்களது ஜாதியையோ, மதத்தையோ ஒருவர் சமூகவலைத்தளங்களில் தாறுமாறாக மாறி மாறி கூறுவதை ஏற்க முடியாது என்று தோன்றும் சின்மயிக்கு அதே சமூகவலைத்தளங்களில் அவர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார் மற்றவர் கூறினால் அதை நம்பலாம் இதை நம்பக்கூடாது சரியா என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு சின்மயி நீங்கள் எப்படி மாட்டி கேள்வி கேட்டாலும் எனக்கு இதற்கு சாமர்த்தியமாகவோ, சாதூர்யமாகவோ பதில் கூற வரவில்லை. எனக்கு இது நடந்தது, என்னைச் சார்ந்த பெண்களுக்கும் இது நடந்தது... பெண்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்கிறோம் எங்களுக்கு இது ஒரு உபகரணமாக இருக்கிறது என்று கூறினார்.

கடைசியாக ஒவ்வொரு பெண்களுக்கும் நடக்கும் இந்த பிரச்சினையை வீட்டில் இருக்கும் ஆண்கள் கட்டாயம் காது கொடுத்து கேட்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடையே கூறுவதற்கு பயந்து கொண்டிருக்கின்றனர் அவ்வாறு இருக்கக்கூடாது என்று கூறியுள்ளார்.

27236 total views