பிறந்து 4 நாட்களே ஆன குழந்தை! தூக்கி வீசி சென்ற பெண்? வீடியோ காட்சி

Report
185Shares

சென்னையை அடுத்த போரூரில் பிறந்து 4 நாட்களே ஆன குழந்தையை பெண் ஒருவர் வீசி சென்ற கொடூர காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சி,சி,டி,வி காட்சியை கொண்டு பொலிசார் வீசி சென்றது யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை போரூரை அடுத்த காரம்பாக்கம் சுடுகாடு அருகே நேற்று இரவு சாலையோரம் அருகில் இருந்த கால்வாயின் அருகே குழந்தையின் அழுகுறல் கேட்டுள்ளது.

இதனையடுத்து தனியார் நிறுவன காவலர் ஒருவர் குழந்தையை மீட்டு அருகே இருந்த காவல் சோதனை சாவடியில் ஒப்படைத்தார். முதலுதவி செய்த பிறகு சென்னை எலும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில் ஒரு பெண்ணும் ஆணும் குழந்தையை வீசி செல்லும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு காமெராவில் பதிவாகியுள்ளது. குழந்தையை வீசி சென்றது அவரது பெற்றோர்களா? அல்லது கடத்தியவர்களா என்று பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

6800 total views