மனைவியை கொலை செய்த கணவனும் தற்கொலை! பரிதவிக்கும் குழந்தை...

Report
85Shares

சென்னை பூந்தமல்லியில் குடும்பத் தகராறில் மனைவியைக் கொலை செய்த கணவர், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சின்னமாங்காட்டைச் சேர்ந்த வெங்கடேசனுக்கும், அவரது மனைவி துர்காவுக்கும் இன்று அதிகாலை சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது கழுத்தை நெரித்ததில் துர்கா உயிரிழந்தார். இதை அடுத்து தனது இரு பெண் குழந்தைகளை அருகில் உள்ள துர்காவின் தாயார் வீட்டில் விட்டு வந்த வெங்கடேசன், வீட்டின் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அங்கு வந்த துர்காவின் உறவினர்கள், கணவரும் மனைவியும் உயிரிழந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பூந்தமல்லி பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

3676 total views