மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய்! தந்தை எடுத்த அதிரடி முடிவு

Report
275Shares

சென்னையில் பெற்ற மகளுக்கு தாய் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த குமார் என்பவருக்கு திருமணமாகி 14 வயதில் ஒரு பெண் உள்ளார். குமாரின் மகள் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் அந்த சிறுமி தனது தந்தை குமாரிடம் சென்று, அம்மா தனக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக கூறியிருக்கிறார். இதனால் பேரதிர்ச்சிக்கு ஆளான குமார், தனது மனைவியை கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குமாரின் மனைவி, பெற்ற மகளை கொல்ல திட்டமிட்டுள்ளார்.

இதனையறிந்த குமார், இந்த விஷயத்தை இப்படியே விட்டுவிடகூடாது என கருதி, இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் பொலிசார் குமாரின் மனைவியை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

10086 total views