புருஷன் பொண்டாட்டி செய்யுற வேலையா இது! பொலிசாரை அதிரவைத்த தம்பதி...!

Report
649Shares

டெல்லி Govindpuri - யில் நீண்ட நாட்களாகவே பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வந்த போலீசார் அப்பகுதியை சேர்ந்த விக்கி மற்றும் வரது மனைவி சோனியா ஆகிய இருவர்களையும் கைது செய்துள்ளனர்.

விக்கி 8-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு, சிறுவயதிலேயே திருட்டு வேளைகளில் இறங்கிவிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவருடன் இணைந்து அவரது மனைவி சோனியாவும் சேர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டிருக்கின்றார்.

இவர்கள் இருவரும் திருட்டு வேளையில் ஈடுபடும்போது, சோனியா முகத்தில் துணியை கட்டிக்கொள்வார். விக்கி தலையில் தலைக்கவசத்தை அணிந்து கொண்டு திருட செல்வதாக பொலிஸ் விசாரணையில் இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

மேலும், திருடச்செல்லும்போது பயன்படுத்தும் இருசக்கர வாகனத்தின் எண்ணை கண்டுபிடிக்க கூடாது என்பதற்காக, வேறு ஏதாவது ஒரு நம்பர் பிளேட்டை வைத்துக்கொண்டு செல்வதாகவும் கூறியுள்ளனர். இதனையடுத்து இருவரையும் கைது செய்தனர்.

25310 total views