10 ஆண்டுகள் குழந்தை இல்லாத தம்பதி! பின்பு அடித்த ஜாக்பாட்

Report
469Shares

இந்தியாவில் திருச்சியில் பத்தாண்டுகளாக குழந்தையின்றி இருந்த தம்பதியினருக்கு ஓரே பிரசவத்தில் மூன்று குழந்தை பிறந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை சேர்ந்தவர் பாண்டியன் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் பட்டதாரியான கோகிலாராணி என்பவருக்கு திருமணமாகியுள்ளது. இந்த தம்பதிகள் 9 ஆண்டுகளாக குழந்தைபேறு இல்லாமல் மனவேதனையில் இருந்த நிலையில் கோகிலராணி கருவுற்றார்.

நேற்று மாலை திருச்சியில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோகொலராணிக்கு ஓரே பிரசவத்தில் மூன்று குழந்தை பிறந்துள்ளது.

இரு ஆண் குழந்தை மற்றும் 2 பெண் குழந்தையும் சுமார் 2 கிலோ எடை கொண்டதாக இருந்ததாக கூறப்படுகிறது. ஒரு குழந்தை மட்டும் குறைவாக எடையுடன் இருந்ததால் தீவிர சிகிச்சை கண்காணிப்பு பிரிவில் வைக்கப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளாக குழந்தையின்றி இருந்த தம்பதியினருக்கு ஓரே நேரத்தில் மூன்று குழந்தை பிறந்த சம்பவம் தம்பதியினர் மட்டுமின்றி உறவினர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

20634 total views