அபிராமி காதலனுடன் போனில் பேசிக்கொண்டு... ஸ்டைலாக கண்னாடி போட்டு தப்பித்து சென்ற சிசிடிவி கட்சிகள்...!

Report
2039Shares

நான் பெரிய தவறு செய்துவிட்டேன். எனக்கு மன்னிப்பே இல்லை என அபிராமி சிறையில் ஒரு வழக்கறிஞரிடம் புலம்பியதாக கூறப்படுகிறது.

சென்னை குன்றத்தூரை சேர்ந்த அபிராமி, பிரியாணிக்கடை சுந்தரத்தின் மீது கொண்ட கள்ளக்காதலால் 4 வயது மகள் கார்னிகா மற்றும் 7 வயது மகன் அஜய் ஆகிய இருவரையும் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து அபிராமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சிறையில் அபிராமியை ஒரு வழக்கறிஞர் சந்தித்து பேசியுள்ளார்.

தொடக்கத்தில் பேச முடியாமல் அழுது கொண்டே இருந்த அபிராமி, அதன் பின் ‘ நான் தவறு செய்து விட்டேன்.

என் குழந்தைகளை கொன்றுவிட்டேன். அதற்கு மன்னிப்பே இல்லை. தற்போது தினம் தினம் சாகிறேன்’ என அழுது கொண்டே அதற்கு மேல் பேச முடியாமல் திணறியுள்ளார்.

பின்பு சிறிது நேரத்திற்குப் பின் பேசிய அவர் “விஜய்யும் நானும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.

எளிமையான வீட்டில் வாழ்க்கை அழகாகத்தான் சென்று கொண்டிருந்தது.

அப்போதுதான் சுந்தரத்துடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் பணிபுரிந்த பிரியாணி கடைக்கு என் கணவர் விஜய் அழைத்து சென்றார்.

அதன் பின் அடிக்கடி அங்கு சென்று பிரியாணி வாங்கினேன். அப்போது பிரியாணி அதிகமாக கொடுத்து சுந்தரம் என்னை ஸ்பெஷலாக கவனித்தார்.

அதன் பின் ஆர்டர் கொடுத்தால் வீட்டில் கொண்டு வந்து கொடுப்பார். அப்படித்தான் அவருடன் பழக்கம் ஏற்பட்டது.

தொடக்கத்தில் விஜய் இதுபற்றி எதுவும் கேட்கவில்லை. ஆனால், அவருடன் நெருக்கமாக பழகியது அவருக்கு பிடிக்கவில்லை. எனவே, என்னை கண்டித்தார்.

ஆனால், சுந்தரத்துடன் உறவை என்னால் முறித்துக்கொள்ள முடியவில்லை.

அதனால் தான்,அவருடன் வாழ வேண்டும் என இப்படி செய்துவிட்டேன் என அழுது கொண்டே அந்த வழக்கறிஞரிடம் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், அபிராமி குழந்தைகளை கொலை செய்துவிட்டு தனது கள்ளக் காதலனுடன் தப்பித்து சென்ற பொது கோயம்பேடு பஸ் நிலையத்தில் பதிவான சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் ஹெட் பொன் மாட்டிக் கொண்டு தனது காதலனுடன் பேசிக்கொண்டு தப்பித்து சென்றுள்ளார்.

85664 total views