அடைக்கலம் தேடிய காதல் ஜோடி... பொலிஸ் நிலையத்தில் நடந்த கொடூமை! காதலன் எடுத்த விபரீத முடிவு

Report
728Shares

பாதுகாப்பு கருதி காவல்நிலையத்தில் அடைக்கலம் தேடிய காதல் ஜோடியை பிரிக்க கரூர் நகர காவல்துறை முயன்றதால், மனமுடைந்த காதலன் கழுத்தறுத்து தற்கொலை முயற்சி செய்த விவகாரம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் அண்ணாநகர் பகுதியில் உள்ள ராமானுஜர் நகர் தெற்கு பகுதியை சார்ந்த கோபிநாத் (வயது 24) இவரது தகப்பனார் சுப்பிரமணி.

கோபிநாத் சேலத்தில் உள்ள தனியார் பேக்டரியில் பணியாற்றி வரும் நிலையில் கோபிகா (வயது 19) என்ற மாணவியை காதலித்துள்ளார்.

இருவருக்கும் காதல் மலர்ந்தது. அந்த பெண் கரூரை சேர்ந்த போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உறவினர் ஆகும். எனவே, காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அந்த காதல் ஜோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு கோயிலில் திருமண செய்து கொண்டனர். மேலும், பாதுகாப்பு கருதி நேற்று மாலை கரூர் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

ஆனால், அப்பெண் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் உறவினர் என்பதால், காவல் ஆய்வாளர் பிரித்திவிராஜ் காதலர்களை மிரட்டியுள்ளார்.

இந்த பெண்ணை விட்டு ஓடி விடு.. இல்லையேல், பொய் வழக்கில் உன்னை சிறைக்கு அனுப்பி விடுவேன் என கோபிநாத்தை மிரட்டியுள்ளார். அதோடு, இருவரையும் பிரித்து அப்பென்ணை அவரின் குடும்பத்தினருடன் அனுப்பி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனவே, பாதிக்கப்பட்ட கோபிநாத் தனக்கும் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று கருதி காவல்நிலையத்திலேயே கத்தியை எடுத்து கழுத்தறுத்து தற்கொலை முயற்சிக்கு ஈடுபட்டுள்ளார்.

ஆனால் கத்தியானது திருப்பி வைத்து அறுத்ததினால் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கிருந்தவர்கள் கோபிநாத்தை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

24810 total views