சிறுவனைக் கடித்துக் குதறிய தெருநாய்!.. சி.சி.டி.வி காணொளியில் சிக்கிய பரபரப்பு காட்சி

Report
100Shares

திருச்சியில் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை தெருநாய் ஒன்று கடித்து குதறும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

திருச்சி வள்ளுவர் நகரைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவ்வழியாக வந்த தெருநாய் ஒன்று, சிறுவனை திடீரென கடித்துக் குதறியது.

சிறுவனின் அழுகுரலைக் கேட்ட ஒரு இளைஞர், உடனடியாக அங்கு வந்து அவனை மீட்டார். ஆனாலும் வெறி அடங்காத அந்த நாய் அந்த இளைஞரையும் கடித்தது.

சிறுவனையும், இளைஞரையும் நாய் கடித்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இந்நிலையில் இன்றும் சிறுமியை தெருநாய் கடித்துள்ளது.

அப்பகுதியில் அடிக்கடி நாய்கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

3770 total views