மியூசியத்தில் திருடிச்சென்ற தங்க டிபனில் தினமும் வயிறு முட்ட முட்ட சாப்பிட்ட திருடன்! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

Report
141Shares

ஹைதராபாத் மியூசியத்தில் இருந்து திருடிச்சென்ற தங்க டிபன் பாக்ஸில் கொள்ளையன் ஒருவன் தினமும் சாப்பாடு வைத்து சாப்பிட்டது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருங்காட்சியகத்தில் நிஜாம் மன்னர் பயன்படுத்திய பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைரத்தால் ஆன பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதில் இருந்து கொள்ளையர்கள் தங்க டிபன் பாக்ஸை மும்பைக்கு திருடிச்சென்றுள்ளனர்.

இதைத்தொடர்ந்து மும்பையில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் 2 பேரை பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள், மும்பையில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கொள்ளையடித்த நாளில் இருந்து கைதாகும் வரை, கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், தங்க டிபன் பாக்சில்தான் தினமும் உணவை சாப்பிட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

இதேவேளை, தங்கத்திலான டிபன் பாக்ஸ், துபாய் சந்தையில் 30 அல்லது 40 கோடி ரூபாய் வரை விலைபோக வாய்ப்பு உள்ளது.

5285 total views