வில்லங்கமான விவகாரத்தில் சிக்கி வைரலான அதிமுக எம்.எல்.ஏக்கு வேறொரு பெண்ணுடன் தடபுடலா கல்யாணம்!

Report
67Shares

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஈஸ்வரனுக்கு நாளைய தினம் திருமணம் நடைபெறவுள்ளது.

கடந்த வாரம் திடீரென வைரலான அரசியல்வாதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஈஸ்வரன்.அதுவும் ஒரு சாதனையால் கிடைத்த பெயரென்றாலும் கூட பரவாயில்லை .வில்லங்கமான ஒரு விவகாரத்தில் சிக்கிதான் வைரலானார்.

அதாவது 42 வயதாகும் ஈஸ்வரன் இப்போதுதான் திருமணத்து தயாராகி, பெண்ணும் பார்த்து நாளை (செப்டம்பர் 12) பண்ணாரியில் வைத்து திருமணம் செய்ய முடிவெடுத்திருந்தார்.

இதில் தப்பில்லை வாழ்த்த வேண்டிய விஷயம்தான். ஆனால் அவர் பார்த்திருந்த பொண் அவரை விட 19 வயது சிறியவர்.

’இவ்வளவு வயதான மாப்பிள்ளை வேண்டாம்’ என்று போராடிப் பார்த்த பெண், பெற்றோரின் டார்ச்சரால் நிச்சயத்துக்கு சம்மதித்தார்.

ஆனால் கடந்த வாரம் திடீரென வீட்டை விட்டு அவர் காணாமல் போக, விஷயம் பொலிசாருக்கு போக, அதன் பின் உலகத்துக்கே தெரிஞ்சு போனது இந்த விவகாரம்.

இச்சூழலில், தன்னை வெறுத்து ஒரு பெண் சென்றுவிட்டதால், கல்யாணத்துக்கு நாள் குறித்த அதே முகூர்த்தத்தில் வேறு ஒரு பெண்ணை மணக்க இருக்கிறார் எம்.எல்.ஏ. சத்தியமங்கலத்தில் உடனடியாக வேறு ஒரு பெண்ணை பார்த்து பேசி முடித்துவிட்டனர்.

அந்தப் பெண்ணுடன் நாளை அவருக்கு திருமணம். இந்தப் பெண்ணின் வயதும் ஒன்றும் எம்.எல்.ஏ. வயதுக்கு நெருங்கியதில்லை என்கிறார்கள்.

3840 total views