நடுரோட்டில் பொலிசார் செய்த செயல்...இணையத்தையே கலக்கிக் கொண்டிருக்கும் வீடியோ!

Report
544Shares

இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் நடனமாடிக்கொண்டே சாலை போக்குவரத்தை கட்டுப்படுத்தும் காவலர் ஒருவரின் வீடியோ இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

ஒடிசா மாநிலம், புவனேஷ்வர் பகுதியைச் சேர்ந்தவர் பிரதாப் சந்திரா கந்தவால். இவர் அப்பகுதியில் போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வருகிறார்.

33 வயதாகும் பிரதாப் சந்திரா நடுரோட்டில் நடனமாடிக்கொண்டே சாலை போக்குவரத்தை கட்டுப்படுத்தினை கட்டுபடுத்தி வருகிறார்.

இதுகுறித்து பிரதாப் தெரிவிக்கையில்... சாலை போக்குவரத்து விதிகளை மதிப்பது பொதுமக்களுக்கு சிரமமாக இருக்கும் நிலையில், எனது நடன அசைவுகளால் அர்களை போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க வலியுறுத்தி முயற்சித்து வருகின்றேன்.

ஆரம்பத்தில் சாலை விதிகளை மீறி சென்ற பொதுமக்கள் தற்போது எனது நடன அசைவுகளை பார்த்து பொருமையாக செல்கின்றனர். இதனால் அவர்கள் சாலை விதிகளை அவர்களை அறியாமலேயே மதித்து செல்கின்றனர்" என குறிப்பிட்டுள்ளார்.


இதற்கு முன்னதாக, மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த போக்குவரத்து காவலர் ரான்ஜீத் சிங் தனது நடன அசைவுகளால் சாலை போக்குவரத்தினை கட்டுப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இவரது வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பல லைக்ஸ்களை தட்டிச் சென்றது.

தற்போது பிரதாப் சந்திரா கந்தவால் மீண்டும் தனது நடன அசைவுகளால் சாலை விதிகளை காப்பாற்றிவரும் நிலையில் இவர் ரான்ஜீத் சிங்கினை நினைவு கூர்ந்துள்ளார் என பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.