ஓடும் ரயிலில் இளம்பெண் செய்த செயல்! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

Report
134Shares

இளைஞர்கள் சாகசம் செய்வதிலும், உயிரை துச்சமென எண்ணி, சில அசாத்திய காரியங்களில் ஈடுபடுவதும் இப்போது வழக்கமான ஒன்றாகி விட்டது.

அதிலும், மின்சார ரெயில்களில் படிகட்டில் தொங்கியபடி செய்யும் விபரீத சாகசங்கள் காண்போரை அச்சத்தில் ஆழ்த்துகிறது. சில சமயங்களில் அதனால் ஏற்படும் மிகப்பெரிய பின்விளைவுகள் சாகசம் செய்வோரையும், குடும்பத்தாரையும் சோகத்தில் ஆழ்த்துகிறது.

ஆண்கள் மட்டும்தான் இதுபோன்ற வீண் சாகசங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், பெண்களும் தற்போது இதுபோன்றவற்றில் களமிறங்கிவிட்டனர்.

மும்பை நகரில், துறைமுகம் வரை இயக்கப்படும் மின்சார ரெயிலில் ரே சாலை ரெயில் நிறுத்தத்தில் இருந்து காட்டன் கிரீன் ரெயில் நிலையம் வரை இளம் பெண் செய்த சாகசம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

ரே சாலை ரெயில் நிலையத்தில் தனது நண்பர்களுடன் ஏறிய இந்த இளம் பெண், காட்டன் கிரீன் நிலையம் வரும் வரை படிகட்டில் தொங்கியபடி, கடந்துசெல்லும் ரெயில்வே தடுப்புகளை தொடும் மிக மோசமான முயற்சியில், மிக உற்சாகமாக ஈடுபட்டுள்ளார். இதனை அந்த ரெயிலியில் பயணம் செய்த பயணி ஒருவர் தனது செல்போன் மூலம் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

5812 total views