தனது பிறந்த நாளன்று குழந்தைகளை பறிகொடுத்த அபிராமியின் கணவர் தற்போது எங்கே இருக்கிறார் தெரியுமா?

Report
1747Shares

பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த விஜய், மனைவி செய்த துரோகத்தால் குழந்தைகளை இழந்து தவித்து வருகிறார்.

குன்றத்தூரை சேர்ந்த வங்கி ஊழியர் விஜய். இவரது மனைவி அபிராமி. அபிராமிக்கு அப்பகுதியில் பிரியாணி கடையில் வேலை செய்த சுந்தரத்துடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் சுந்தரத்தை வரவழைத்தும் சுந்தரத்தின் வீட்டிற்கு சென்றும் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார் அபிராமி.இந்த விஷயம் குடும்பத்தினருக்கு தெரிய வரவே அபிராமியை கண்டித்து அடித்து உதைத்துள்ளார் அவரது தந்தை. இதனால் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சுந்தரத்தின் வீட்டிற்கே சென்றுவிட்டார் அபிராமி.

இதைத்தொடர்ந்து அவரை அழைத்துவந்து கணவருடன் சேர்த்து வைத்துள்ளார் அபிராமியின் தந்தை சவுந்தரராஜன். இந்நிலையில் சுந்தரத்துடன் நிரந்தரமாக வாழ முடிவு செய்த அபிராமி இரண்டு குழந்தைகளையும் கணவரையும் கொல்ல முடிவு செய்தார்.

தனது முடிவு குறித்து கள்ளக்காதலன் சுந்தரத்திடம் கூறிய அபிராமி அவரது ஆலோசனைப்படி கடந்த 30ம் தேதி இரவு இரண்டு குழந்தைகளுக்கு மாத்திரை கொடுத்துள்ளார். இதில் மகள் மரணமடையவே, உயிர் பிழைத்த மகனை மறுநாள் மூச்சை திணறடித்து கொன்றார் அபிராமி.

கணவர் விஜய் அலுவலகத்தில் தங்கியதால் அபிராமியும் சந்தரமும் போட்ட ஸ்கெட்சில் இருந்து தப்பினார். இந்நிலையில் தனது பிறந்தநாளன்று பெற்ற குழந்தைகளை இழந்து பைத்தியம் பிடித்தது போல் தவித்து வருகிறார் விஜய்.

குழந்தைகளை இழந்த துக்கம் மற்றும் மனைவியின் துரோகத்தில் இருந்து மீள முடியாமல் துயரத்தில் ஆழ்ந்துள்ளார் விஜய். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்தவர் விஜய்.

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் சென்னை அமைந்தகரையில் உள்ள பிரபல தனியார் ஓட்டலில் சமையல் கலை படிக்க சென்றபோது, அபிராமிக்கும் விஜய்க்கும் இடையே காதல் மலர்ந்தது.

வெவ்வேறு சமூகம் என்பதால், இருவீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அபிராமி பிடிவாதமாக விஜய்யை தான் திருமணம் செய்வேன். இல்லையென்றால், செத்துவிடுவேன் என்று சொன்னதால் வேறு வழியின்றி அபிராமியின் பெற்றோர் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டனர்.

ஆனால் விஜய்யின் பெற்றோர் திருமணத்திற்கு கடைசிவரை சம்மதிக்க மறுத்துவிட்டனர். இதனால் பெற்றோரின் எதிர்ப்பை மீறி, விஜய் வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்தார்.

சென்னை குன்றத்தூரில் இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்தனர் அபிராமியின் பெற்றோர். முதலில் சந்தோஷமாகத்தான் இருவரும் குடும்பம் நடத்தினர். இரண்டு குழந்தைகள் பிறந்தன.

ஆனால் அபிராமியின் ஊதாரித்தனம், அனைவரும் தனது அழகை வர்ணிக்க வேண்டும் என்ற ஆசை, கூடவே காமவெறி இதனால் பல ஆண்களுடன் சமூகவலைதளங்களில் தொடர்பில் இருந்துள்ளார் அபிராமி.

அப்படி அறிமுகமான சுந்தரத்தின் அன்புக்கும் அவரது காம இச்சைக்கும் அடிமையான அபிராமி, தான் பெற்றெடுத்த குழந்தைகளை துள்ள துடிக்க கொன்றார். கள்ளக்காதலனுக்காக தனது காதல் கணவரையும் கொல்ல துணிந்தார் அபிராமி.

அபிராமிக்காக முதலில் பெற்றோரை இழந்தார் விஜய். தற்போது தான் ஆசை ஆசையாய் பெற்று வளர்த்த குழந்தைகளையும் வாரி கொடுத்துள்ளார். வாழ்க்கையை இழந்து விரக்தியில் தவிக்கும் விஜயை தங்களுடனே தங்க வைத்துள்ளனர் விஜயின் அபிராமியின் பெற்றோர். சுற்றி சுற்றி வந்த பிள்ளைகள் இல்லாத நிலையில் சிறிய ஆறுதலுக்காக அவர்களின் பேச்சை ஏற்று மாமனார் வீட்டில் தங்கியுள்ளார் விஜய்.

61528 total views