திருமணமான இரண்டே மாதத்தில் தற்கொலை செய்துகொண்ட பெண்! என்ன காரணம்..

Report
279Shares

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே திருமணமான இரண்டாவது மாதத்தில் பெண் தற்கொலை செய்துகொண்ட நிலையில், நீதி விசாரணை வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சிதம்பராபுரம் பகுதியைச் சேர்ந்த காளிராஜுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மணிமேகலைக்கும் இரு மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. காளிராஜ் சென்னையில் தனியார் பள்ளி வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் தாய் வீட்டுக்குச் சென்ற மணிமேகலை அங்கு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

காளிராஜுக்கு சென்னையில் வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் சனிக்கிழமையன்று செல்போனில் பேசியபோது இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் உறவினர்கள் கூறுகின்றனர். எனவே மணிமேகலையின் இறப்பு குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

9261 total views