ஜாமீனில் வந்த ரவுடி.. தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்ட சி.சி.டி.வி. காட்சி!

Report
318Shares

தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டம் பழனி தெரசம்மாள் காலனியைச் சேர்ந்த ரவுடி அய்யாவுவை ஒரு கும்பல் கொடூரமாக கொலை செய்யதுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி சாமி தியேட்டர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியான அய்யாவு 32 வயதான அய்யாவு ஏற்கனவே நடந்த 4 கொலை வழக்குகளில் தொடர்புடையவர் என்பதால் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

கடந்த புதன்கிழமை இரவு மதுகுடித்த அய்யாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வாய்த்தகராறு முற்றிய நிலையில் அங்கு வந்த ஆறுமுகத்தின் நண்பர்கள் ரவுடி அய்யாவுவை கடுமையாக தாக்கினர். இந்த காட்சிகள் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி. ஒன்றில் பதிவாகியுள்ளன.

அய்யாவு கீழே சரிந்த நிலையில் குடிபோதையில் இருந்த ஆறுமுகமும் அவரது நண்பர்களும் ரவுடி அய்யாவின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆறுமுகம் அவனது நண்பர்கள் சூரியகுமார் எழில்புத்தன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய ராம்குமார் என்பவனை தேடி வருகின்றனர்.

காணொளியை இங்கே அழுத்தி பார்க்கவும்.

10690 total views