கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடிக்க கணவருக்கு கழுத்தில் கத்தியுடன் போட்டோ அனுப்பிய பெண்?

Report
264Shares

கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்தவர் மனு. இவருக்கும் கோட்டயத்தை சேர்ந்த மீனு என்ற பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் மனு வேலைக்கு சென்று விட்டார். சிறிது நேரத்தில் மனைவி செல்போனில் மனுவை அழைத்து தன்னையும், மகனையும் ஒரு கும்பல் கடத்த வீட்டுக்குள் புகுந்து கழுத்தில் கத்தியை வைத்து அறுப்பதாக கூறி முடிக்கும் முன்பே இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் கழுத்து அறுக்கப்பட்டது போன்ற போட்டோ அவரின் வாட்ஸ் ஆப்புக்கு வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த மனு பொலிசாருடன் வீட்டுக்கு சென்றார். அப்போது வீடு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது ரத்தக்கறை ஆங்காங்கே சிதறி கிடந்தது. பொலிசார் சோதனையில் ஈடுபட்டபோது ரத்தம் குறித்து சந்தேகம் ஏற்பட்டது.

அதில் தண்ணீர் ஊற்றி பார்த்தபோது அது ரத்தம் இல்லை. குங்குமம் என்று தெரிந்தது. இதனால் மீனுவின் மீது பொலிசாரின் சந்தேகப் பார்வை திரும்பியது. மீனுவின் செல்போன் எண்ணை வைத்து சைபர் கிரைம் பொலிசாருடன் அவரை பிடிக்க திட்டமிட்டனர். இந்நிலையில் அவர் கோழிக்கோடு ரெயில் நிலையத்தில் இருப்பதாக தெரியவந்தது.

அங்கு சென்ற பொலிசார் மீனு, அவரது மகன் மற்றும் அவருடன் இருந்த வாலிபர் ராஜிவ் என்ற வாலிபரையும் பிடித்தனர். 3 பேரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் காதல் திருமணம் செய்து குடும்பம் நடத்திய மீனுவுக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜிவ் என்ற வாலிபருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் வீட்டை விட்டு ஓடிப்போக திட்டமிட்டனர்.

அதற்கான சமயம் எதிர்பார்த்த நிலையில் ஒரு கும்பல் கடத்தியதாக நாடகமாடலாம் என்று அவர்கள் திட்டம் தீட்டினார். நேற்று முன்தினம் கணவருக்கு போன் செய்து கும்பல் கழுத்தை அறுத்து கடத்திவிட்டதாக கூறிவிட்டு மகனுடன் கள்ளக்காதலன் ராஜிவுடன் காரில் தப்பிச்சென்றது தெரியவந்தது.

பொலிசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து மீனு மற்றும் கள்ளக்காதலன் ராஜிவ் ஆகியோரை கைது செய்தனர்.

11574 total views