வாய் பேச முடியாத சிறுமி! வீட்டில் தனியாக இருந்த போது கற்பழிக்கப்பட்ட அவலம்...

Report
116Shares

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த வாய் பேச முடியாத 9 வயது சிறுமி, அதேபகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு வந்துள்ளார்.

சிறுமியின் பெற்றோர் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பாத நிலையில், அவர் மட்டும் தனியாக இருந்துள்ளார்.

அப்போது அந்த வழியாக வந்த கருவேப்பிலைபாளையம் கிராமத்தை சேர்ந்த கார்த்தி மாணவியின் வீட்டுக்குள் நுழைந்து சிறுமியை கொடூரமாக கற்பழித்துள்ளார்.

அந்த சிறுமியிடம் நடந்ததை வெளியில் சொல்லக் கூடாது என மிரட்டியுள்ளார். பின்னர் கார்த்தி மீண்டும் சிறுமியை கற்பழிக்க முயன்றபோது சிறுமியின் பெற்றோர்கள் விட்டுக்கு வந்துவிட்டனர். உடனடியாக கார்த்தி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அப்போது அந்த வாய்பேச முடியாத அந்த சிறுமி, தனக்கு நேர்ந்ததை சைகை மூலம் பெற்றோரிடம் சொன்னார். இதில் அதிர்ந்து போன சிறுமியின் பெற்றோர் கார்த்திக் வீட்டுக்கு சென்று, ஏன் எனது மகளிடம் தவறாக நடந்தாய்? என தட்டிக்கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் மற்றும் அவரது உறவினர்கள் உள்ளிட்ட 4 பேர், மாணவியின் தாயை ஆபாசமாக திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது

3999 total views