குழந்தைகளுக்கு அருகில் சென்று இரவு முழுதும் படுத்திருந்த சிறுத்தை! விடிந்ததும் நடந்த சுவாரஸ்யம்?

Report
140Shares

மராட்டிய மாநிலத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை குட்டி அங்கிருந்த வீட்டுக்குள் நுழைத்து இரவு முழுவதும் குழந்தைகளோடு உறங்கிய சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மனிஷா ஜாதவ் என்ற பெண்மணி இரவு வழக்கம்போல் தனது இரண்டு குழந்தைகளையும் கொசுவலை விரித்து அதற்குள் தூங்கவைத்தார். பின்னர் அவரும் தூங்க சென்றுவிட்டார்.

அதிகாலை 5.30 மணியளவில் மனிஷா ஜாதவ் எழுந்தபோது அவர் கண்ட காட்சி திடுக்கிட வைத்தது. கொசு வலைக்குள் குழந்தைகளுடன் சிறுத்தைப்புலி குட்டி ஒன்று படுத்து தூங்கிக்கொண்டிருப்பதை கண்ட அவர் நிலைகுலைந்து போனார்.

இரவில் வந்து சிறுத்தை புலி குட்டி தனது குழந்தைகளுடன் படுத்திருப்பதை உணர்ந்துகொண்டார். இதில் என்ன சுவாரஸ்யம் என்றால் சிறுத்தைப்புலி குட்டியால் குழந்தைகளுக்கு பாதிப்பு எதுவும் ஏற்பட வில்லை.

பொறுமையாக கொசுவலையை விலக்கிவிட்டு 2 குழந்தைகளையும் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தார்.

பின்னர் இவர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், சிறுத்தைப்புலி குட்டியை பிடித்து சென்றனர்.

6916 total views