நான்கு பெண்களுடன் தனியாக சிக்கிய இளைஞர்... பின்பு நிகழ்ந்த கோர சம்பவம்!

Report
408Shares

ஈரோடு அருகே 4 பெண்கள் சேர்ந்து ஒரு இளைஞரை பயங்கரமாக அடித்துக் கொன்ற கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் பெரியசேவூரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் லட்சுமி பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட தவறான தொடர்பால் வீட்டை விட்டுச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மணிகண்டன், தனது சகோதரர் செல்வக்குமாருடன் மனைவி லட்சுமியை தேடிச் சென்றார். அவருக்கு அறிவுரை கூறி வீட்டிற்கு அழைத்து வரும் வழியில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மணிகண்டனை எதிர்த்து பேசிய அண்ணி லட்சுமிக்கு, செல்வக்குமார் புத்தி சொன்னதாகவும், அப்போது லட்சுமியின் கன்னத்தில் செல்வக்குமார் அடித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் செல்வக்குமார் வியாழக்கிழமை மாலை கடைவீதிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பும் போது வழிமறித்த லட்சுமியின் தாய் தந்தை, மற்றும் சகோதரிகள் சேர்ந்து அவரை சரமாரியாக கட்டையால் தாக்கினர்.

4 பெண்களுக்கு மத்தியில் தனியாக சிக்கிக்கொண்ட செல்வக்குமாரின் சட்டை கிழிந்தது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இருசக்கர வாகனத்தில் ஏறிப் புறப்பட்ட அவரை, 4 பெண்களும் சேர்ந்து மீண்டும் தாக்க அவரும் பதிலுக்கு தாக்கினார்.

4 பெண்களும், மேலும் இரு ஆண்களும் சேர்ந்து அக்கம் பக்கத்தினரை அருகில் நெருங்க விடாமல் கொலைவெறியுடன், ஆடைகளைக் களைந்து தாக்கினர். வயிற்றிலும் இடுப்புப் பகுதியிலும் கத்திரிகோலால் குத்திக் காயப்படுத்தினர். இதனால் அவர்களிடம் இருந்து தப்பி உயிர் பிழைக்க ஓடிய செல்வக்குமார், புதரில் சென்று பதுங்கினார். அங்கேயும் ஓடிச்சென்று அவர் மீது அந்த 4 பெண்களும் தாக்குதல் நடத்தினர்.

இதனால் பலத்த காயம் அடைந்த செல்வக்குமார் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக பலியானார். ஊரார் மத்தியில் பட்டப் பகலில் நடந்த இந்த பயங்கர கொலை சம்பவம் குறித்து, ஈரோடு வடக்கு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், தனது செல்போனில் எடுத்த வீடியோ காட்சிகளை காவல்துறையினரிடம் வழங்கி உள்ளார்.

அதன் அடிப்படையில், தாக்குதலில் ஈடுபட்டதாக கண்ணையன், பாப்பாத்தி, ஜோதி, பரமேஸ்வரி, மூர்த்தி, லட்சுமி உள்ளிட்டோரை பிடித்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

தவறான வழியில் சென்ற மகளைக் கண்டிப்பதை விட்டுவிட்டு, புத்தி சொன்னவரை குடும்பமே சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

15408 total views