கைவிட்ட பிள்ளைகளால் பெற்றோரின் அவலநிலை

Report
72Shares

பிள்ளைகள் கைவிட்ட விரக்தியில் பெற்றோர் தங்களுக்காக சவக்குழியை தோண்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பரதம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சாரங்கபாணி. இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு ஒர் மகனும் ஒரு மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்ட நிலையில், இவர்களது மகன் பெற்றோரை தனியாக தவிக்க விட்டு தனியாக வசித்து வந்தார்.

பிள்ளைகள் இவர்களை ஏமாற்றிக் கொண்டிருப்பது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் என்எல்சி நிறுவனத்திற்கு இந்தத் தம்பதியர் நிலம் கொடுத்ததற்கான இழப்பீடை தராமல் அவர்கள் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். இதனால் அவர்கள் வறுமையில் வாடினர். இதனால் விரக்தியின் உச்சத்திற்கே சென்ற பெற்றோர், தங்களுக்கான சவக்குழியை தோண்டினர். கவனிக்க ஆள் இல்லாததால் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாகவும், தாங்கள் தோண்டிய குழியிலேயே தங்களது உடல்களை அடக்கம் செய்துவிடுமாறும் உறவினர்களுக்கு போன் செய்து கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அவர்களது வீட்டிற்கு சென்று அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். அப்பொழுதும் அவர்களது பிள்ளைகள் வரவில்லை. தம்பதியர் தங்களுக்குத் தாங்களே சவக்குழி தோண்டிக்கொண்ட சம்பவம் அப்பகுதிவாசிகளைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உனக்கும் முதுமை வரும், அப்பொழுது உணர்வாய் உன் பெற்றோரின் வலியும் வேதனையையும். நீ அதை உணரும் போது உன்னுடன் உன் பெற்றோர் இருக்க மாட்டார்கள். எப்பொழுது தான் இந்த மாதிரியான பிள்ளைகள் எல்லாம் திருந்தப் போகிறார்களோ?

2824 total views