மனைவி கண்முன்னே கணவனின் மர்ம இடத்தில் அடித்து கொலை செய்த பெண்

Report
540Shares

மனைவியின் கண் முன்னே துடிதுடிக்க கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் அந்த கொலையை செய்தது மற்றொரு பெண்தான் என்பது கூடுதல் பயங்கர செய்தியாகும். ஈரோட்டை அடுத்த பெரியசேமூர் கல்லாங்கரட்டை சேர்ந்தவர் செல்வக்குமார். இவர் விசைத்தறி தொழிலாளி. இவரதுமனைவி லீலாவதி. செல்வக்குமாருக்கு வயது 25, லீலாவதிக்கு வயது 22. செல்வக்குமாரின் அண்ணி முறை உறவுள்ளவர் லட்சுமி என்பவர். கடந்த 3-ம் தேதி லட்சுமி, தனது கணவரை விட்டு இன்னொருவருடன் ஓடிப் போய்விட்டார்.

இப்படி லட்சுமி வீட்டைவிட்டு போய்விட்டதால் குடும்ப மானம் போகிறதே என்று நினைத்த செல்வகுமார், எங்கெங்கேயே தேடி, கடைசியில் சங்ககிரியிலிருந்து கடந்த 6-ம் தேதி லட்சுமியை மீண்டும் அவரது வீட்டுக்கு கூட்டி வந்து விட்டு சென்றார். இதனால் லட்சுமிக்கு செல்வக்குமார் மீது ஆத்திரம். செல்வகுமார் மீது பயங்கரமான கோபத்தில் இருந்துள்ளார் லட்சுமி.

இந்நிலையில், நேற்று தன் செல்வகுமார் தனது மனைவி லீலாவதியுடன் வெளியில் சென்று லட்சுமி வீட்டு வழியே வந்து கொண்டிருந்தார். செல்வகுமாரை கவனித்த வந்த லட்சுமி, வீட்டிலிருந்து ஓடி வந்து தகராறில் ஈடுபட்டார், "என்னை ஏன் இங்கே கூட்டி வந்தாய்? அப்படியே என்னை விட்டிருக்க வேண்டியதுதானே?" என்றார்.

திடீரென லட்சுமி மறைத்து வைத்திருந்த உருட்டுக்கட்டையை எடுத்து செல்வக்குமாரை பயங்கரமாக தலையில் தாக்கினார். இதில் செல்வக்குமாருக்கு மண்டை பிளந்து ரத்தம் கொட்டியது. பின்னர் சாலையோரம் கிடந்த ஒரு பெரிய கல்லை கொண்டு வந்து செல்வக்குமாரின் வலது காலில் மடார் என போட்டார். வலி பொறுக்க முடியாமல் செல்வக்குமார் அலறி துடித்தார். அப்போதும் ஆத்திரம் அடங்காத லட்சுமி, செல்வக்குமாரின் மர்ம உறுப்பில் பலமாக எட்டி உதைத்தார். இப்போது செல்வக்குமார் சுருண்டு விழுந்து இறந்தே போய்விட்டார். இவ்வளவும் செல்வகுமாரின் மனைவி லீலாவதி முன்பே நடந்து முடிந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக வீரப்பன்சத்திரம் போலீசார் விரைந்து வந்தனர். செல்வகுமாரை உடலை கைப்பற்றி ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக லட்சுமி உறவினர்கள் 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இப்படி செல்வக்குமார் மீது அவரது உறவினர்கள் தாக்குதல் நடத்தியபோது அதை ஒருவர் செல்போனில் எடுத்துள்ளார். அந்த வீடியோ காட்சிகளையும் வெளியிட்டு உள்ளார்.

எதை எதை வீடியோ எடுக்கிறதுன்னு ஒரு விவஸ்தை கிடையாதா? கர்ண கொடூர கொலை ஒன்று நடப்பதைகூட வீடியோ எடுத்து கொண்டிருக்க இவர்களுக்கு எப்படி மனசு வருகிறது? ஒரு பெண் பட்டப்பகலில் தாக்குதல் நடத்தும்போது, அதை தடுத்து நிறுத்த உதவியிருக்க கூடாதா? செல்வக்குமாரை தாக்குதலின்போது தடுத்தி நிறுத்தியிருந்தால் ஒரு உயிர் இப்படி அநியாயமா போயிருக்காதே? கணவனை இப்படி கொடூரமாக தாக்கி, மண்டையை பிளந்து, காலை உடைத்து, மர்ம உறுப்பை மிதித்து கொன்ற சம்பவம் தன் கண்முன்னாலேயே நடைபெற்றதை கண்டு பாவம், அந்த மனைவி எப்படியெல்லாம் துடித்தாளோ? என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

20298 total views