காணக் கிடைக்காத... தந்தை பெரியாரின் இறுதி ஊர்வலம்! வீடியோ

Report
201Shares

பெரியார் என அனைவராலும் அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி அவர்கள், எழுச்சியூட்டும் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்ததிற்காவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், சாதி வேற்றுமைகளை அகற்றுவதற்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர்.

தமிழகத்தின் மிகப்பெரிய கழகமான திராவிடர் கழகத்தை தோற்றுவித்தவர். பெண் விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும், திராவிடர்கள் பார்பனரல்லாதார் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்படுவதையும் எதிர்த்துப் போராடிய சமூக சீர்திருத்தத்தின் தந்தை.

தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ் என்றும் இந்தியாவின் கண்ணிராத பகுத்தறிவு சிற்பி என்றும் போற்றப்பட்டவர் தான் ஈ.வெ. ராமசாமி என்ற தந்தை பெரியார்.

இவர் வாழ்வின் முக்கிய கட்டமாக, 1937 ஆம் ஆண்டு திகழ்ந்தது.

அந்தாவது, 1937-ல் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றபிறகு இந்தி கட்டாயமொழியாக பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதனால் தமிழகம் முழுவதும் எதிர்ப்புகளும், போராட்டங்களும் வெடித்தன. இந்தி பேசும் வடஇந்தியர்களிடமிருந்து தமிழர்களை பிரித்து இரண்டாம் தர குடிமக்களாக காட்டுவது மட்டுமல்லாமல், தமிழர்களின் முன்னேற்றத்தையும், பண்பாட்டையும் சிதைத்து விடும் என வலியுறுத்தி 1938- ல் நீதிக்கட்சியின் சார்பாக பெரியார் மற்றும் சர்.ஏ.டி. பன்னீர் செல்வம் தலைமையில் நடந்த போராட்டத்தில் பெரியாருடன் பலர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

1939 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட பெரியார் நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார்.

இதையடுத்து, பெரியார் அவர்கள், நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு நீதிக்கட்சி என்ற பெயரை 1944-ல் ‘திராவிட கழகம் என பெயர் மாற்றினார்.

மக்களுக்குள் சுயமரியாதை, சமத்துவம், சகோதரத்துவம் ஓங்கி வளரவேண்டும் என்று கடைசிவரை போராடிய பெரியாரின் கடைசி கூட்டம் 1973 டிசம்பர் 19 ஆம் தேதி சென்னை தியாகராஜர் நகரில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் சாதிமுறையையும், இழிவுநிலையையும் ஒழித்துக்கட்ட திராவிடர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடவேண்டும் என்று முழக்கமிட்டு தன்னுடைய கடைசி உரையை முடித்துக்கொண்டார்.

உலகின் மாபெரும் சுயசிந்தனையாளரும், அழியாத வரலாற்றின் அறிஞருமான தந்தை பெரியார், டிசம்பர் 24, 1973 ஆம் ஆண்டு காலை 7.31 மணி அளவில் தனது 95 வது வயதில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

இவரது உடல் சென்னையிலுள்ள வேப்பேரி என்ற பகுதியில் பெரியார் வாழ்க, என்று விண்ணை முட்டும் கோஷங்களுக்கிடையே, அரசாங்க மரியாதையுடன், முப்பத்தாறு முறைகள் பீரங்கி குண்டுகள் முழங்க, இராணுவ பாண்டுகள் சோககீதம் இழைக்க, பகுத்தறிவுப் பகலவன் பெரியாரின் புனித உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவரது இறுதி ஊர்வலத்தின் காணொளி இதோ....

7732 total views