கலைஞர் இறுதி அஞ்சலியில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் பலியான சோகம்!

Report
80Shares

தி.மு.க. தலைவர் கருணாநிதி இறுதி அஞ்சலி நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது. ராஜாஜி அரங்கில் லட்சக்கணக்கானோர் அஞ்சலி செலுத்திய போது போலீசாரின் பாதுகாப்பையும் மீறி திடீரென ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.

50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் பலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தமோகன் என்பவர் இன்று உயிரிழந்தார்.

மேலும் 7 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களை சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதனிடையே இறுதி அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி வந்துவிட்டுச் சென்ற பின் ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடுகளே கூட்ட நெரிசலுக்கு காரணம் என புகார் எழுந்துள்ள நிலையில் அது குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

3015 total views