கடவுள் பக்தியே இல்லாத கருணாநிதி வீட்டு பூஜை அறையில் இடம்பெற்ற படங்கள் என்னனென்ன தெரியுமா?

Report
1917Shares

கருணாநிதியின் வீட்டில் பூஜை அறையில் அவரது தாய், தந்தை, முதல் மனைவி ஆகியோரின் படங்களை வைத்திருந்தார்.

கருணாநிதி திராவிட கொள்கைகளில் அதிக ஈடுபாடு கொண்டவர். இவர் ஒரு நாத்திகவாதி. ஆனால் இவரது வீட்டில் பூஜை அறை போன்ற மாடம் உள்ளது. இதில் யார் யார் படங்களை வைத்துள்ளார் தெரியுமா.

அவரது தாய் அஞ்சுகம், தந்தை முத்துவேலர், முதல் மனைவி பத்மாவதியின் படங்களை வைத்திருந்தார். முக்கியமான நாட்களின் போதும், அவரது மனம் காயம்படும்போதும், அந்த படத்தின் அருகில் சென்று சிறிது நேரம் மவுனமாக நிற்பாராம்.

கருணாநிதிக்கு விரோதி என்பது தனிமைதான். எப்போதும் கட்சியினர் அல்லது நண்பர்கள் புடைசூழ இருக்க வேண்டும் என்று விரும்புவாராம். அவர்களுடன் அரட்டை போட்டுக் கொண்டு எப்போதும் அவர் இருக்கும் இடம் சிரிப்பலையால் நிரம்பிவிடுமாம். அது போல் தான் உடல்நலம் பாதிக்கப்படும் வரை நடந்து வந்ததாம்.

தூக்குமேடை என்ற நாடகத்தின் போது எம். ஆர்.ராதா 'கலைஞர்' என்ற பட்டத்தை கருணாநிதிக்கு அளித்தார். இன்று வரை அப்பெயர் தான் அவரது சிறப்பை அடையாளப்படுத்தி வருகின்றது என்றால் அது மிகையல்ல.

பதில் அளிக்க இயலாத கேள்விகளுக்கு எதிர்க் கேள்வி போட்டு சமாளிப்பது கருணாநிதியின் பாணி. ஆண்டவனை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? என்ற கேள்விக்கு, அது பிரச்சனை அல்ல. ஆண்டவன் நம்மை ஏற்கிறானா என்று தான் பார்க்க வேண்டும் என்று லாவகமாக பதில் அளித்து சமாளித்துவிடுவார்.

பரவலாக மனிதனுக்கு மூளையின் இரு பக்கங்களில் ஏதாவது ஒன்றுதான் சிறப்பாக செயல்படும் என்பார்கள். ஆனால் இரண்டுமே மேன்மையாகச் செயல்படுவது கருணாநிதிக்கு தான் என பிரபல நரம்பியல் நிபுணர் ராமமூர்த்தியே ஒரு முறை தெரிவித்திருந்தார்.

எந்த ஊருக்கு சென்றாலும் சரி, அல்லது தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றாலும் சரி, கடந்த முறை அங்கு வந்த போது, நான் பார்த்த நபர்கள் பற்றியோ அல்லது பேசிய பேச்சுக்கள் பற்றியோ அப்படியே எடுத்துக் கூறும் அசாத்திய திறமை படைத்தவர். அந்த அளவு நினைவாற்றில் கொண்ட பெரும் அரசியல் தலைவர். இதுவரை இப்படி ஒரு அரசியல் தலைவர் இருந்ததில்லை.

68069 total views